Friday 12 January 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள் : ஆண்டாள் பேச்சு – வழுக்கிட்டேளே வைரமுத்து சார்!


வைரமுத்து சார்! பாத்தேளா, ஏதோ ஆண்டாள் புண்ணியத்துல உங்களைப் பத்தி பெரிய மனுஷா நிறையப்பேர் பேச ஆரமிச்சுட்டா. ஆனா  நீங்க என்ன புண்ணியம் பண்ணினேளோ இல்லையோ, அதெல்லாம் பாராட்டுப் பேச்சா இல்லை. ஒரே கண்டனமாத்தான் இருக்கு.  நீங்களும்   அது  ஏன்னு புரியாத மாதிரி இருக்கேள்.  நான் புரிய வைக்கட்டுமா?

அடிப்படைலேர்ந்து ஆரமிக்கறேன். உங்களுக்கு தெய்வ நம்பிக்கை, மத நம்பிக்கை கிடையாது.  நீங்க அப்படி இருக்கறது தப்புன்னும் சொல்ல மாட்டேன். உங்க நம்பிக்கை இல்லாமையோட நீங்க பாட்டுக்கு இருக்கலாம். ’உங்க எண்ணத்தை மாத்திண்டு நீங்க இந்துன்னு நம்பிக்கையோட சொல்லிக்கணும், இந்து கடவுள்களைக் கும்பிடணும்’னு யாரும் உங்க கிட்ட சொல்ல மாட்டா. ஆழ்ந்த தெய்வ நம்பிக்கை உள்ள  இந்துக்களே உங்க கிட்ட  அதை எதிர்பாக்க மாட்டா, அப்படி மனசுல கூட நினைக்க மாட்டா.  உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லைன்னா, அந்தக் காரணத்துக்காக மட்டும் அவா உங்களை நிந்தனையும் பண்ண மாட்டா. அப்படின்னா, ஒரு மனுஷன்கற முறைல உங்களை மதிச்சு நடக்கற அவாளோட பண்பு எவ்வளவு உசந்தது?  அதே மாதிரியான பண்பை நீங்களும் அவாகிட்ட காமிக்கணுமா வேண்டாமா?  

இந்துக்கள் வழிபடற முக்கிய கடவுள் பெருமாள். பெருமாளை கொண்டாடறதும் துதிக்கறதும்தான்  தன்னோட வாழ்க்கை லட்சியம்னு வளர்ந்த பெண் ஆண்டாள்.  கடசீல பெருமாளோடயே ஐக்கியம் ஆன பெண் அப்படின்னு பக்தர்கள் நம்பறா.  பன்னிரண்டு ஆழ்வார்கள்ள ஒருத்தர்னு இந்துக்கள் வணங்கற தெய்வம். வைஷ்ணவர்கள் அவரை தாயாரா கொண்டாடறா. இதெல்லாம் தெரிஞ்சுதான ஒரு கன்னா பின்னா பேச்சு பேசினேள்? ராஜபாளையம் மேடைல தினமணி ஏற்பாடு செஞ்ச கூட்டத்துல பேசினேளே, அதைச் சொல்றேன்.

ராஜபாளையம் கூட்டத்துல, ஆண்டாளைப் பத்தி கடைசி கட்டமா சொல்லும் போது,  ”அவர் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து இறந்த ஒரு தேவதாசிப் பெண் அப்படின்னு அமெரிக்கால ஒரு ஆய்வாளர் அவர்   கட்டுரைல   குறிப்பிட்டிருக்கார்”னு ஒரு குண்டைப் போட்டேள்.   உங்க முழுப் பேச்சு மறுநாள் தினமணில கட்டுரையா வந்தது.  அந்த ஆய்வாளர் எழுதினதை  நீங்க அமோதிக்கறேளா மறுக்கறேளான்னு உங்க பேச்சுலயோ கட்டுரைலயோ நீங்க நேரடியா சொல்லலை, ஆனா மறைமுகமா சொல்லிருக்கேள்.  உங்க பேச்சும் கட்டுரையும் அந்த ஆய்வாளர் கருத்தை நியாயப் படுத்தற முடிவோட படிப் படியா கட்டி அமைக்கப் பட்டதுன்னு, உன்னிப்பா கவனிக்கறவாளுக்கு தெரியும். உங்களுக்கு நன்னாவே தெரியணும். 

ஆய்வாளரோட குறிப்பு சரியா தப்பான்னு நீங்க நேரடியா சொல்லாட்டாலும், இப்படி தொடர்ந்து பேசினேள்: "பக்தர்கள் இதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆணாதிக்க எதிர்ப்பாளர்களும் பெண்ணுரிமைப் போராளிகளும் சமய சமூக மறுப்பாளர்களும் எண்ணிப் பார்ப்பார்கள்".  மறுநாள் அச்சுல வந்த  கட்டுரைலயும் அதையே  எழுதிருக்கேள் – அதுல ‘பெண்ணுரிமைப் போராளிகள்' விடுபட்டிருக்கு, அவ்வளவுதான். 

வைரமுத்து சார்! நீங்க சொல்றது புரியறது. நீங்களோ பக்தர் இல்லை.  ஆணாதிக்க எதிர்ப்பாளர்தான். பெண்ணுரிமைப் போராளி'களுக்கு ஆதரவு குடுக்கறவர். 'சமய சமூக மறுப்பாளர்'னும் (என்ன அர்த்தமோ) பெருமையா நினைச்சுக்கறவர். மொத்தத்துல, உங்கள மாதிரி மனுஷர்தான் தமிழ் நாட்டு ஒரிஜினல் பிராண்ட் ’பகுத்தறிவுவாதி’.  அப்பறம் என்ன? "பக்தர், பகுத்தறிவுவாதிங்கற பிரிவுகள்ள நான் ரண்டாவது பிரிவுல இருக்கேன். அதுனால, பக்தர்கள் மாதிரி ஆய்வாளர் கருத்தை எதிர்க்க மாட்டேன். ஒரு பகுத்தறிவுவாதியா நானும் அந்தக் கருத்தை எண்ணிப் பாப்பேன்” அப்படிங்கறேள். அதாவது,  ”ஆண்டாளைப் பத்தின அந்த ஆய்வாளரோட கருத்துதான் என்னோட கருத்துன்னு நேரடியா  தெரிவிக்காம, அதையே தலைய சுத்தி முக்கைத் தொட்டு சொல்லிருக்கேள். இதைத் கூட மனுஷா புரிஞ்சுக்கலைன்னா உங்க கவிதை எல்லாம் படிச்சு எப்படி புரிஞ்சுப்பா, சொல்லுங்கோ.

தெய்வ நம்பிக்கை உள்ள இந்து மனுஷாள்ட்ட உங்க பண்பை ஒரு பதில் மரியாதையா வெளிப்படுத்த ஓரே வழிதான் இருக்கு. அவா எப்படி உங்க நம்பிக்கை இல்லாத் தனத்தை அவமதிச்சு பேசலையோ, அதே மாதிரி நீங்களும் அவா உன்னதமா வணங்கற தெய்வங்களையும் தெய்வப் பிறவிகளையும் கொச்சைப் படுத்தி இழிவா பேசாம இருக்கணும். ஆனா நீங்க அப்படி பேசினேள்எழுதினேள். அதுலதான் நீங்க தாழ்ந்து போயிட்டேள் - நீங்க தெய்வ நம்பிக்கை வச்சுக்காததுனால இல்லை.

நீங்க பேசினதுக்கும் எழுதினதுக்கும் எதிர்ப்பு வந்த உடனே, "நான் ஒரு ஆய்வாளார் கருத்தைத்தான் சொன்னேன்” அப்படின்னேள். அப்பறம் அரைகுறையா ஏதோ  வானத்துக்கு சொல்ற மாதிரி மனசில்லாம ட்விட்டர்ல ஒரு வருத்தம்  வெளியிட்டேளே, அப்பவும் ஆய்வாளர் கருத்து “என் கருத்தன்று”ன்னு நழுவினேள். உங்க கருத்து இல்லாத, நீங்க உடன்படாத இன்னொருத்தர் கருத்தை - அதுவும் இந்துக்கள் வணங்கற தெய்வத்தை பழிக்கற கருத்தை - எதுக்கு வெளியிட்டேள்? கூட்டத்துல  உக்காந்து உங்களை கேட்டவாளும், அப்பறம் உங்களைப் படிச்சவாளும் வைரமுத்து என்ன சொல்ல வரார்னு தெரிஞ்சுக்க இருப்பாளா, இல்லை அவருக்கு எதிரா உலகத்துல – அது ஐரோப்பாவோ, அமெரிக்காவோ, ஆப்பிரிக்காவோ - யார் யார் என்ன சொல்றான்னு வைரமுத்துவே சொல்லட்டும்னு ஆவலா இருப்பாளா?

இதோட விட்டேளா? 'அமெரிக்க ஆய்வாளரோ, அவரை மேற்கோள் காட்டின நானோ ஆண்டாளை ஒண்ணும் இழிவா பேசலை'ன்னு சொல்ல வந்தேள். ”தேவதாசிங்கற சொல்லுக்கே ஆரம்பத்துல உயர்ந்த பொருள் இருந்தது, துறவு மனப்பான்மை உடைய பெண், கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அப்படிங்கற அர்த்தம்தான் அந்த சொல்லுக்கு இருந்தது.  அந்த உரிமையை இந்து மதம் பெண்களுக்கு குடுத்த அடையாளம்தான் அந்தச் சொல். பின்னால நில உடமைச் சமுதாயம் அந்தச் சொல்லை இழி பொருளா ஆக்கினது” அப்படின்னு ஒரு டெலிபோன் சம்பாஷணைல நீங்க  தப்பிக்கற விளக்கத்தை விட்டேள். அதாவது, நீங்க ராஜபாளையத்துல பேசினதும் பத்திரிகைல எழுதினதும் தப்பு அர்த்தத்துல இல்லைங்கற தொனில இப்படியும் ஜகா வாங்கினேள். ஆனா அந்த வார்த்தையை சாதாரண மனுஷா இப்ப எப்படி அர்த்தப் படுத்திப்பான்னு உங்களுக்கு தெரியும். அதான முக்கியம்? அதை வச்சுத்தான உங்க பேச்சுக்கும் கட்டுரைக்கும் இப்ப எதிர்ப்பு கிளம்பிருக்கு?

அமெரிக்க ஆய்வாளர் அந்த வார்த்தையை  ”உயர்ந்த பொருள்ள பயன்படுத்தினார்னு எடுத்துக்கணும்” அப்படிங்கற மாதிரி ஒரு  டெலிபோன் உரையாடல்ல விளக்கம், அப்பறம் ட்விட்டர்ல யார்கிட்டயோ பட்டும் படாம வருத்தம் சொல்லிக்கற போது, ”அது ஆய்வாளர் கருத்து. அது என் கருத்தல்ல”ன்னு ஒரு மறுப்பு – ரண்டும் உங்ககிட்டேருந்து வந்திருக்கு. அப்படின்னா, ’உயர் பொருள் அர்த்தம் என் கருத்து இல்லை’ன்னு நீங்களே கெக்கே பிக்கேன்னு பேசறதா அர்த்தம் வர்றதே! பார்த்தேளா, கூட்டத்துலயும் சரி, கட்டுரைலயும் சரி, அப்பறமா நீங்க குடுத்த விளக்கங்கள்ளயும் சரி, நேர் படப் பேசாம கண்ணா மூச்சி ஆடி பேசினா நீங்களே மாட்டிக்கறேள்.

நீங்க பாட்டுக்கு தெய்வ நம்பிக்கை இல்லாத வழில தேமேன்னு போனபோது இந்துக்கள் உங்களை சட்டை பண்ணாம அது சம்பந்தமா உஙக கிட்டேர்ந்து விலகித்தான இருந்தா? இப்ப உங்க கிட்ட மோதறா, உங்களைக் கோபிக்கறான்னா, நீங்க அவாள அனாவசியமா சீண்டிருக்கேள். இப்ப என்ன பண்ணலாம்னா, நீங்க நேரடியா, நீட்டா கொளரதையா  மன்னிப்பு கேட்டா  நீங்க உங்க வழில போலாம், அவாளும் அவா வழில அமைதியா போயிண்டிருப்பா. என்ன சொல்றேள் வைரமுத்து சார்?

* * * * *


Copyright © R. Veera Raghavan 2018

11 comments:

  1. Just an apology is not enough. Vairamuthu has to give the correct source of the basis for this claim for andal. Also, he needs to show what is basis on which the researcher had reached the conclusion. If he is not able to provide any such basis, then he should declare that and then ask for apology.

    ReplyDelete
  2. ஆண்டாள் என்பவள் ஒரு தமிழிலக்கியக் கவி. அதுவும் இப்போதைய நவீன பெண் கவிகளையும் விடவும் பாலியலை வெளிப்படையாகப் பேசி ஒரு பாய்ச்சலை ஏற்படுத்திய கவி. அவள் ஒன்றும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் சொந்தமானவள் அல்ல. தமிழிலக்கியம் வாசிக்கும் அனைவருக்கும் பொதுவானவள். அவளைக் கொண்டாடுவதற்கும் விமர்சிப்பதற்கும் எல்லோருக்கும் உரிமையுள்ளது.
    வைரமுத்துவின் சமீபத்திய ஆண்டாள் பற்றிய கட்டுரையில் அவர் ஆண்டாளைக் கொண்டாடுகிறார். இப்படிப்பட்ட ஆகச் சிறந்த கவி தேவதாசியாக வாழ நேர்ந்துவிட்ட அவலவாழ்வைத் தமிழ் வாசகனுக்குக் கோடி காட்டி தன் வேதணையை வெளிப்படுத்துகிறார்.

    இந்துமதவாதிகளின் நம்பிக்கையின்படி தேவதாசிகள் என்பர்கள் யார்”? அவர்கள் கடவுளிடம் தங்களை ஒப்புக் கொடுத்து அவரையே தங்களுடைய புருஷனாக வரித்துக் கொண்டவர்கள். ஆண்டாளும் தன்னைக் கடவுளுக்காக அர்ப்பணித்துக் கொண்டு அவரோடு புணர்வதான பல கவிதைகளைப் புனைந்திருக்கிறார். ஆண்டாளின் பாசுரங்கள் முழுவதிலும் அப்படிப்பட்ட கவிதைகள் விரவிக் கிடக்கின்றன. அபடியென்றால் ஆண்டாளும் ஒரு தேவதாசியாக இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது தானே? இதை ஒரு ஆராய்ச்சியாளன் சொன்னால் எதற்கு ஆர்ப்பரிக்க வேண்டும்? அது அப்படி இல்லையென்றால் அதற்கான சான்றுகளுடன் அவர்களும் ஒரு கட்டுரை எழுதிவிட்டுப் போக வேண்டியது தானே.....!

    மேலும் தேவதாசிகள் என்பவர்கள் இந்துமதத்தைப் பொறுத்தவரை புனிதமானவர்கள் தானே! அவர்கள் தங்களை ஆண்டவனிடம் சமர்ப்பித்துக் கொண்டவர்கள் என்று தானே இந்துமதத்தினர் நம்புகிறார்கள். அப்படி நம்பியதால் தானே அன்றைக்கு நீதிக்கட்சியினர் தேவதாசி வாழ்க்கை முறையை ஒழிக்க முனைந்த போது இந்து சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பவர்கள் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள்.


    இந்துக்கள் புனிதமாகக் கருதும் தேவதாசி வழியில் வந்தவராக ஆண்டாள் இருந்திருக்கலாம் என்று ஒரு அயல்நாட்டவரின் ஆராய்ச்சி முடிவை வைரமுத்து தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டதற்காக அதே இந்துக்கள் இன்று இப்படிப் பொங்குவதேன்? தேவதாசிகள் புனிதமானவர்கள் என்றால் வைரமுத்துவும் ஆண்டாளைப் புனிதமானவராகத் தானே சித்தரித்திருக்கிறார்.
    வைரமுத்து ஆண்டாளை ஒரு கவியாகப் பார்த்து அவளுடைய அவல வாழ்விற்காக வேதணைப் படுகிறார். ஆனால் இந்துமதவாதிகள் ஆண்டாளைக் கடவுளாகப் பார்க்கிறார்கள். அதில் தான் பிரச்னை. அவர்கள் கல்லையும் கவிகளையும் கடவுளாகப் பார்த்தால் எல்லோரும் அப்படியே பார்க்க வேண்டுமா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஆண்டாள் ஒரு அசாதாரண கவி. வடநாட்டின் மீராபாய் போன்றவள். ஆனால்...
      மற்ற தேவதாசிகள் போல் மாசு பட்டவள் அன்று. சரித்திரத்தில் உயர் சாதி என்று சொல்லிக்கொள்ளும் அந்தணர்கள் தேவயாசிகளை மாசு படுத்தி கீழ்த்தரப்படுத்தியதை மறக்க முடியுமா?
      ஆண்டாளுக்கு அந்த தாழ்வு இல்லை. ஆக மதிற்புக்குறியவள்.

      Delete
    2. I do not agree with Mr Suburaj. He should understand that the words coming from a anti Hindu God’s hater. Where is the need for talking about a devout Bakthai who is worshipped as Mother by all Hindus. He should have avoided mentioning anything about her.
      There seems to be an ill intention in his mind and he probably didn’t expect much protest like previous instances when other Dravidian party leaders speak. Since it has hurt the sentiments of those Hindus, all Hindus should boycott all his films and his speeches on Political and other platforms, whenever he participates !

      Delete
  3. எவ்வளவு அலசினாலும் இந்த அழுக்கு போகாது! இதையெல்லாமலசவேண்டிய அவசியமே இல்லைன்னு நெனெக்கிறேன் பாட்டி! அவர்கேட்டது மன்னிப்புமில்லை மண்ணாங்கட்டியும் இல்லே. இவாள்ளாம் க்றிஸ்துவாளெப்பத்தியோ, முஸ்லீம்களைப் பத்தியோ பேசுவாளோ? பயம்! வெறும் கோழையாச்சே! நரசய்யா

    ReplyDelete
  4. பாட்டி, நீங்க சொல்றதெல்லாம் வைரமுது மாமா காதுல விழாது; அது ஒரு தனி ஜன்மம்; விட்டு தள்ளுங்கோ இதப்போயி பெருசா எழுதி என்னத்தக் கண்டேள்? கவிஞர்ண்டு சொல்லிக்கொள்ரவா எல்லாம் ஒருவிதமாத்தாம் இருப்பா. சிவ்னேண்டு ப்கவான் கெட்ட இவாளுக்கு நல்ல புத்தியக் குடுப்பாண்டு பிரார்த்தன பண்ணுங்கோ.

    ReplyDelete
  5. nanna sonnel pongo. It is unfortunate Hindu religion and Gods are targeted willy nilly. Tolerance has been the virtue of Hindus over centuries

    ReplyDelete
  6. The best way to humiliate a person is to ignore the person. He cannot even understand the greatness of Hinduism, let alone agree with it. Have not the elders said ‘Keep distance from evil’? Not just one, thousands of Vairamuthus cannot disgrace the Hindu religion. Let us just ignore him.

    ReplyDelete
  7. வைரமுத்துவைப் போன்ற அயோக்யர்கள் நாடு கடத்தப்பட வேண்டும்.இந்துக்களாகிய நாம் பொறுத்து போதும்.களை எடுக்கப்படும் நாள் வெகுதூரம் இல்லை...சுந்தரம்

    ReplyDelete
  8. A very sad day Abujam has rightly concluded . Vairamuthu you go your way, we ours

    There was your predecessor who described the believers of god as Barbarians. He has some followers . In Tamilnadu practical ly everyone believes in God. The symbol of the state t. Is temple

    Calling names of persons whom some worship only demeans the charger. .Ignore him

    ReplyDelete
  9. A very sad day Abujam has rightly concluded . Vairamuthu you go your way, we ours

    There was your predecessor who described the believers of god as Barbarians. He has some followers . In Tamilnadu practical ly everyone believes in God. The symbol of the state t. Is temple

    Calling names of persons whom some worship only demeans the charger. .Ignore him

    ReplyDelete