Thursday 6 December 2018

An Open Letter to Former Judge Kurian Joseph



Dear Hon’ble Justice Kurian Joseph,

Unlike many former judges of the supreme court, even the distinguished ones, you shot into limelight soon after you retired. Not for reasons that did you proud.

You laid down your office a week ago, on the 29th November, and four days later NDTV aired your interview. Sorry, you didn’t shine in the interview – mainly because you spat on the institution you served by maligning the man who headed it as Chief Justice of India.  He, Justice Dipak Misra, had also retired before you.

The whole of India knows that, when you were in the supreme court, you and three companion judges held a press conference against Justice Dipak Misra in Delhi last January. Some may have presumed that a bit of decorum of a judge in office prevented you then from revealing more about him though you possibly had details to disclose. But even after retiring, all you could say against the former chief justice are pompous nothings. May I please explain?

Let me recite some key words you spoke to the television channel, to say what you saw wrong in Justice Dipak Misra and why four sitting judges of the supreme court, including you, gathered against him and met pressmen: “The existence of judiciary should be independent. If it is not independent and if it is dependent, the independence of the judiciary which is the hall mark of Indian judiciary is gone. It is shaken……So we found that there has been external influences on the Chief Justice of India, and he has not been making independent decisions …. We discussed. We brought it to the notice of the Chief Justice of India that things are not going in the right direction. ‘You should correct your ways.’  We met him.  We brought to his notice in writing.  Then finally, without finding any result, as I used to say, the barking dog had to bite… We brought it to the notice of the whole nation.”

Before you were interviewed for television, on the same day Press Trust of India quoted you: "The then CJI was remote-controlled by an external source. There was some influence of some external source that was impacting the administration of justice." When asked to specify the basis of your assertion, you told PTI it was the perception among you and three other judges who figured in the January press conference - and some unnamed other judges as well. That's all. You told other journalists also about your 'perception' as the basis of your claim. Today's edition of The Hindu reports that when questioned on proof to substantiate your 'external influence' theory you said, "It was a perception. There was a perception in the minds of not only the four of us but among several other judges and the media."

      I am still searching for maturity and credibility in your statements. For instance, you didn't reveal how you found that, apart from the four of you, several other judges too had an identical perception of an external influence driving Justice Dipak Misra. Did those other judges tell you or was it your perception that they had the same perception like yours? And the probing talkative media too seem totally unaware they have the perception you attribute to them, since they have never expressed it themselves - that's why many of them described your latest revelations as 'a bombshell' or 'explosive'. Can you guess what an image of yourself you create in the minds of others, Hon'ble Justice Joseph? Common people coming to court will hope that you were not deciding cases as a judge on the basis of similar perceptions.

Do you realise what a damning criticism you uttered against India's head of the judiciary, with whom you served?  You know that independence is an essential quality of a judge in whom people can trust. If you fault Justice Dipak Misra for lacking in that trait, you portray him as a most unfit judge, even at district level. If you still believe you spoke with responsibility when decrying him, let me recall more of what you spoke and ask you a few things, so you become clearer to those watching you.

The television interviewer queried you on your view that Justice Misra was “remote-controlled” and asked, “Who was holding the remote control?  Was it the influence of the government or was it political influence?”  Having been a supreme court judge, you gave this stunning reply to back up your charge: “I … we have no idea as to who was the person behind.  But we were quite sure that the Chief Justice of India was not taking decisions independently… I am not able to pinpoint as to who was influencing him.  But we were much sure he was under some influence.”  Well, when you spoke these words you managed not to laugh. What more can anyone say, Hon’ble Justice Joseph?  
                                             
Did your January press conference curtail the ‘external influence’ emanating from an unknown source and affecting Justice Misra? You seemed to believe so when you told PTI recently that the presser “had an impact and things started changing for good during the remaining part of Justice Misra’s tenure as CJI.” So, you say that Justice Misra was reforming himself and freeing himself from that ‘external influence’ as a result of your press meet in January. But this cause-and-effect story is hard to believe. 

If you cannot pinpoint that ‘external influence’ now, surely you didn't do it while sitting face to face with Justice Misra in his chamber in the supreme court. By simple logic, three other judges who were with you at the January press meet could not also identify that 'external influence' up till now, since the four of you would have shared any such knowledge among you if even one of you gauged it. Then how did Justice Misra banish that 'external influence' - when you did not know what it was or where it came from and so the chief justice did not have to fear you exposing him? Or, are you saying that after you and three other judges met pressmen last January Justice Misra turned a new leaf on his own and got himself out of that 'external influence?' If indeed he did so, what kind of a real influence was that ghostly force when its victim could shake it off instantly?  You were a judge, that too of the supreme court of India. Do you sound convincing to yourself, leave alone others? 

      I was also puzzled by  some  thoughts you  expressed to the same interviewer at different stages of a sitting and to different interviewers, and I just couldn’t put two and two together. You told NDTV early on that you didn’t know if the government was the ‘external influence’. Towards the end of your dialogue, when the interviewer asked you, “Will future chief justices be not remote-controlled?” you quickly replied, “Governments will always try to somehow influence the chief justice because they are not happy at all …..” Did you, per chance, let the cat out of the bag? And then, in The Hindu interview of today, you praised both the present Chief Justice of India Ranjan Gogoi, who was with you at the January press conference, and Prime Minister Narendra Modi for the good rapport between them.

      If  anyone understood or misunderstood you as hinting that the former Chief Justice of India was under the influence of the present government, but that the same government maintains smooth honourable relations with the present Chief Justice of India, the listener or viewer could be left utterly confused. When I see these conflicting pictures coming from you, am I at fault sir?

       When you speak to the public, the public too will speak to you as I do.  Also, you fairly told the television interviewer, “People have a right to raise questions”.  So, you won’t surely mistake the questions I have posed here. Your answers could help everyone understand you better.

     Finally, let me ask you.  The Contempt of Courts Act, 1971, defines ‘criminal contempt’ to include any act which (i) scandalises or lowers the authority of any court, or tends to do so; or (ii) interferes with or obstructs the administration of justice in any other manner, or tends to do so. Assume you were functioning as the Chief Justice of India, and that I met you and accused you of being remote-controlled by some external influence which I felt affected the administration of justice. Assume further I admitted that I could not pinpoint or prove who was influencing you and I still demanded that you correct your ways. Then would you not have hauled me up for criminal contempt, and would I not be close to being convicted? And if I laid the same charge against you publicly after you retired as such Chief Justice, what would you or anyone sensible think of me? Will you please enlighten me, Hon’ble Justice Joseph?

            Warm regards.
                                                                                                        
            R. Veera Raghavan

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018


Saturday 20 October 2018

நானும்தான் (#MeToo) என்றால் நம்பலாமா?


'நானும்தான்' (#MeToo)  என்கிற கோஷம் இந்தியாவில் இப்போது ஒரு இயக்கம் என்று சொல்லப் படுகிறது. இதற்கு பல பக்கங்கள் உண்டு.

ஒரு வருடம் முன்பு, அமெரிக்காவில் சில பெண்கள் பல வருடங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட ஆண்களிடம் பாலியல் வன்முறை அனுபவித்ததாக சமூக ஊடகத்தில் அறிவித்தார்கள்.  குறிப்பாக, ஒரு ஹாலிவுட் தயாரிப்பாளரைப் பற்றி பாலியல் வன்முறை புகார்கள் பரவலாக ஆரம்பித்து மற்ற திசைகளிலும் பரவின. இப்போது நமது நாட்டில், 'நாங்கள் சில வருடங்கள்  முன்பு எங்கள் தொழில் சூழ்நிலையில் இன்ன இன்ன ஆண்களின் பாலியல் துர்நடத்தையை தாங்கிக் கொண்டோம்' என்று பல பெண்கள் புகார் சொல்கிறார்கள். இவை பாலியல் வன்முறை என்று முன் வைக்கப்படவில்லை.  கம்மியான அளவில், துர்நடத்தை, அத்துமீறல் என்பதாக சொல்லப் படுகின்றன. கை காட்டப்படும் பிரபல ஆண்கள் இவற்றை அவதூறு என்று மறுக்கிறார்கள். இருந்தாலும் சம்பத்தப்பட்ட சில சினிமா உலக ஆண்களின் மீது சந்தேகம் வலுக்கிறது.  விஷயம் எளிதா? இல்லை.

'நானும்தான்' குரல்கள் அதிகம் கேட்பது நமது சினிமாத் துறையில். அடுத்து, பத்திரிகைத் துறையிலும் விளம்பரத் துறையிலும். குற்றச்சாட்டுகள் இந்த ரகம்: 'கெட்ட பார்வையை வீசினார்', 'கூச்சம் தரும் வார்த்தைகள் பேசினார்', 'தோள்பட்டையில் பிடித்துவிடச் சொன்னார், மனமில்லாமல் செய்தேன்',  'வலுவில் அணைத்தார், விடுவித்துக் கொண்டேன்', 'கட்டாய முத்தமிட்டார்',  தவறான நோக்கில் தனி அறைக்கு அழைத்தார். போனிலும் கூப்பிட்டார். போகவில்லை', மரியாதைக்காக அவரை பொறுத்துக் கொண்டேன்.'

வருடங்கள் பல கடந்து இப்போது புகார்கள் சொல்வதற்கான காரணம் இவை:  'வளரும் நிலையில்  வேலைக்கான வாய்ப்புகளையும் நான்  இழக்க முடியவில்லை', 'அப்போது வெளியில் சொல்லி இருந்தாலும் என்னை யார் கவனித்திருப்பார்கள்? இப்போது வளர்ந்துவிட்டேன்.  தைரியமாக சொல்ல முடிகிறது.’

சினிமா தயாரிப்புகள் பெரும்பாலும் ஒற்றை மனிதனின் வியாபாரம். அவற்றில் பங்கெடுக்கும் மற்ற கலைஞர்களும் அப்படியே. அவர்களின் உலகத்தில் உழைப்பும் திறமையும் ஓங்கி இருந்தாலும் தனி மனிதப் பண்புகள் ஓரமாக நிற்கும். ஓகோ என்று நீங்கள் வெற்றி பெற்றால் கீழே இருப்பவர்கள் உங்களுக்கு அடிபணிவார்கள், அதுவரை நீங்கள் பிற வெற்றியாளர்களை வணங்கி  நிற்கவேண்டும். உள்ளே நுழையும் பெண்களிடம் வேலை தவிர மற்றதையும் எதிர்பார்க்கும் ஆண்கள் அதிகம். சினிமாத்துறைக்கு போகாதவர்களே இதை சரியாக கணிப்பார்கள். போனவர்களுக்கு உடனே உறைக்கும். அதனால்தான் நடிக்கப் போகும் ஆண் இளைஞர்கள் அப்பாவை கூடவே கூட்டிப் போவதில்லை, ஆனால் இளம் நடிகைகள் முடிந்தால் அம்மாவை பக்கத்திலேயே காவலுக்கு வைக்கிறார்கள்.

வேலை இடங்களில் பாலியல் தவறுகள் செய்யும் ஆண்களை கண்ணியமானவர்கள் ஏற்கமாட்டார்கள். அதே சமயம், ஆண்களுக்கு எதிராக ’நானும்தான்’ இயக்கம் என்ற தளத்தில் இப்போது போர்க்கொடி தூக்கும் பெண்களுக்கு சாதாரண மக்கள் பெரிய அனுதாபமோ பேராதரவோ காட்ட தயங்குவார்கள்.  இதற்கு காரணம் உண்டு.  பல ஆண்டுகள் சென்றபின் இப்போது குற்றம் சொல்லும் பெண்கள் தங்களின் சுய முன்னேற்றத்திற்காக, வேலையில் கிடைக்கும் பொருளாதார பலன்களுக்காக, பழைய நாட்களில் சில ஆண்களின் சீண்டல்களை பொறுத்துப் போனது நடைமுறை  புத்திசாலித்தனம் என்ற அளவில் சரி. ஒருவரின் புத்தியை மற்றவர்கள் ஒரு கணம் பாராட்டலாம், ரசிக்கலாம், வியக்கலாம். அவ்வளவுதான்.  வருமானத்துக்கான - அதுவும் நல்ல வருமானத்துக்கான - வேலையின் போது அவர் தனது சங்கடங்களை புத்திசாலித்தனமாக தாண்டி வந்ததால் அவர் மீது மற்றவர்களுக்கு இரக்கம் இயல்பாக பிறக்காது. உங்கள் வெற்றிக்காக, நன்மைக்காக, உங்கள் வருமானத்திற்காக நீங்கள் வளைந்து கொடுத்தால் அது பெரிதும் நீங்களாக ஏற்றுக்கொண்டது என்றுதான் அந்நியர்கள் நினைப்பார்கள்.  மாறாக, உங்கள் எதிர்ப்பையும் மீறி உங்களை ஒருவர் காயப்படுத்தினாலோ சீர் குலைத்தாலோ பொதுமக்களின் அனுதாபம் தானாக வரும். இது மனித இயல்பு. அதனால்தான் டெல்லிப் பெண் நிர்பயாவிற்கு பஸ்ஸில் நேர்ந்ததும் சென்னை அயனாவரத்து சிறுமிக்கு குடியிருப்பு வளாகத்தில் நிகழ்ந்ததும் அனைவரையும் உலுக்கியது. 

இன்னொரு உதாரணம் பாருங்கள். ஜெயலலிதா அ.தி.மு.க-வின் தலைவியாக எப்படி கோலோச்சினார்? அடுத்த கட்ட தலைவர்களான அத்தனை ஆண்களையும் முதுகு வளைத்து கைகூப்பி நிற்க வைத்தார். அவர்கள் தடாலென்று தன் பாதங்களில் விழுவதையும் தடுக்காமல் ரசித்தார்.  தங்களின் சுய கௌரவத்தை ஜெயலலிதாவின் காலுக்கு அடியில் இழந்த அந்த தலைவர்களின் மேல் நமக்கு இரக்கம் வருமா? வராது. காரணம் நமக்கு கல் நெஞ்சம் என்பதல்ல. அந்த குட்டித் தலைவர்கள் தங்கள் நலனுக்காக, தங்களது ஆதாயத்துக்காக அந்த அசாத்திய பணிவை ஏற்றவர்கள். கிட்டத்தட்ட இந்த சாயலில் இருந்தவர்கள் 'நானும்தான்' மனிதர்கள் என்று பொதுமக்கள் அனேகர் நினைப்பாக இருக்கும்.

   ஒன்றை தெளிவாக சொல்ல வேண்டும் – சாதாரண  பாலியல் தொல்லைகளும் கற்பழிப்பு போன்ற பாலியல் பலாத்காரமும் ஒன்றல்ல.  பின்னது நடந்தால் அதை நிகழ்த்திய ஆண் அந்த குற்றத்தையும் ஆதாரத்தையும் மறைப்பது கடினம்.  பாலியல் பலாத்காரம் நடந்ததாக ஒரு பெண் குற்றம் சொன்னால் – அல்லது அதுபற்றி வெளியில் தெரியவந்தால் – அதை விசாரித்து குற்றவாளி தண்டிக்கப் படவேண்டும். இந்த வன்முறைகளுக்கும், பாலியல் மென்தொல்லைகளுக்கு உடன்பட்டு பின்னர் ஆண்டுகள் கழித்து சொல்லப்படும் ’நானும்தான்’ புகார்களுக்கும் சம்பந்தம் இல்லை.

   இப்போது வெளியாகி இருக்கும் நானும்தான் புகார்கள் ஓரளவு – அல்லது பெருமளவு – உண்மையாக  இருக்கலாம்.  ஆனால் போகப் போக, பழைய நிகழ்வுகள் என்று ஆதாரமே காட்டாமல் இத்தகைய புகார் சொல்லும் எல்லாப் பெண்களையும் நாம் வரவேற்று பாராட்டினால் என்ன ஆகும்? சொந்தக் கணக்குகள் சரி செய்ய, வஞ்சம் தீர்க்க, ரகசிய பேரம் நடத்த, மிரட்டிப் பணம் பறிக்க, எந்த ஆணையும் பெயர் சொல்லி ஒரு நொடியில் மானத்தை வாங்குவதற்கான ஒரு புதிய அஸ்திரத்தை பெண்கள் கையில் கொடுத்தது போலாகும். இந்த அஸ்திரத்தை பெண்களே பிரயோகிக்கலாம், அல்லது பின்னாலிருந்து அவர்களை இயக்கி அரசியல் ஆதாயமோ வியாபார பலனோ கிடைக்க ஒரு ஆணே மற்றொரு ஆணுக்கு எதிராக ஏவலாம். ஆதாரமே வேண்டாம், எடுத்து வீச வேண்டியதுதான்.  இந்தியாவில் இது நடக்காதா?  இல்லை, நமது பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் விவாதம் நடத்தி இத்தகைய பொய் குற்றச்சாட்டுகளை விளம்பரப் படுத்தாதா?

ஒரு மனிதரின் ஒழுக்கத்தை பற்றி எவர் பொது வெளியில் குற்றச்சாட்டு சொன்னாலும் அதை நீதி மன்றங்கள் ஏற்று சம்பத்தப்பட்ட மனிதர் தவறு செய்தவர் அல்லது கிரிமினல் குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லவேண்டும் என்றால் சட்டம் ஏற்கும் ஆதாரத்தை காட்டியாக வேண்டும். ஆதாரம் இல்லை என்றால் குற்றம் சொல்பவர் கோர்ட்டில் வெல்ல முடியாது. அதன் விளைவுகளையும் அவர் ஏற்கவேண்டும். எந்த ஆணும் ஒரு பெண்ணை குறிப்பிட்டு அவரின் நடத்தையை டுவிட்டரில் பழித்தால், அந்த ஆணுக்கும் இதே சட்டம் பொருந்தும். இதற்கெல்லாம் அர்த்தம் இதுதான். வீட்டிலோ வெளியிலோ, சில குறைகளுக்கு நாம் விரும்பும் சந்தோஷத் தீர்வுகள் பூமியில் இல்லை. அதோடு, பிறரை குயுக்தியாக அவமானம் செய்து எவரும் எளிதில் கள்ளத்தனமாக ஜெயிக்கக் கூடாது.

சரி, போகிற போக்கில் வேறு சில பெண்கள் பற்றி ஒரு வார்த்தை. வேலை செய்யும் இடத்தில் நேரும் பாலியல் தொல்லையை எதிர்த்து சட்டென்று செயல்படக் கூடிய பெண்களும் உண்டு. அவர்கள் பாவனையிலேயே அது தென்படும். அதனால் கூட அவர்களை மரியாதையாக அணுகும் ஆண்களும் உண்டு. நீங்களே அந்தப் பெண்களை பார்த்திருப்பீர்கள். அவர்கள், சிறிய வருமானம் பெற்று வீட்டு வேலை செய்யும் எண்ணற்ற பெண்கள்.  மாதம்  ரண்டாயிரம், மூவாயிரம் என்று சம்பாதிப்பார்கள். அவர்கள் வேலை செய்யும் வீட்டின் ஆண்கள், "தனியாக உனக்கு பணம் தருகிறேன்" என்று சொல்லி அந்த வேலைக்காரிகளைக் தப்பாக அணைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த ஏழைப் பெண்கள் எவரும் உடனே துப்பிவிட்டு வேலையை விட்டொழிக்க மாட்டார்கள், பத்து வருடம் கழித்து நீட்டி முழக்கி புகார் சொல்வார்கள் என்று நினைப்பீர்களா? அவர்களின் வாழ்வில் டுவிட்டர், செய்தியாளர் சந்திப்பு, டெலிவிஷன் பேட்டி, என்றெல்லாம் கிடையாது. அவர்கள் புத்திசாலிகள் இல்லையோ?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Saturday 6 October 2018

Sabarimala and the Supreme Court


Can you name the most talked about judgment of the supreme court in recent years? You are right, if you answered “the Sabarimala judgement”.

By a 4:1 majority, supreme court judges declared a week ago that women aged 10 to 50 could also worship at Sabarimala temple in Kerala, as part of their religious freedom.  But this ruling is not relished by an incredibly large number of women whom the court thought was rescuing from an unlawful denial of freedom. Huge numbers of women have come out in the open in Kerala, displaying their resentment spontaneously through rallies everyone can see, while political-minded Hindu-bashers are elated.  What has gone wrong, and where?

Hindus have been observing a rule in their pilgrimage to Sabarimala temple where the presiding deity is Lord Ayyappa.  That is, women in menstruating age do not, and are not allowed to, visit the temple. For convenience, the Travancore Devaswom Board determined that age group as 10 to 50.  This practice has been followed for centuries in Sabarimala, since the temple first opened. Kerala had also recognised this practice by making it a statutory rule which was questioned before the supreme court. After a hearing, the court struck down that rule as opposed to its parent statute and violative of the Constitution too. Now there is no legal bar on women of any age to visit Sabarimala temple. 

Don’t you know: Hinduism is not observed the same way in all of India's regions or amidst all its people or even between those within a family. Believers express their submission to God or their acknowledgement of a supreme being in diverse ways - privately, publicly, ceremonially, subtly, joyfully or as a penance.  If men alone pray in a temple or women alone worship at a shrine, and neither group feels left out or excluded, law must recognise and protect those practices.  

All religious beliefs and practices are a matter of faith. Keep or follow them, as a member of that religion, if you have faith. No one should object to those beliefs and practices, unless they or the way they are observed inflict suffering on another person.  So why not legally recognise those practices and let them prevail? After all, even Communists whose political beliefs and objectives do not honestly go with democracy are allowed a free play under our democratic Constitution.

If a law lets people follow a religion without asking for rational proof of existence of the God they pray – that’s good – but forcibly thrusts its idea of equality between men and women for the way they worship their God, is that law rational?   

To be sure, don't imagine that the law aims to liberate Muslim and Hindu women on an equal footing, and that just as the supreme court invalidated triple talaq and saved Muslim women, so it helped Hindu women by lifting the bar for their entry into Sabarimala temple. There is no comparison between these issues. Better say it and explain, in case anyone thinks otherwise.

To start with, marriages are also a protection for a woman, unlike for a man. No woman of any religion, certainly no Indian woman, would relish her husband having a right to divorce her at his unquestioned sweet will by uttering a word three times. So, the supreme court's judgement of doing away with triple talaq is a true liberation from a clear injustice for Muslim women. The Sabarimala verdict does not cure any injustice on Hindu women. Nor does it create any equality for them with men.  It dismantles no discrimination against Hindu women.  In fact, they cheerfully stand by the men in their families who gear up for 41 days before journeying to Sabarimala, and support in preparatory ceremonies in their homes. They feel blessed for their men's journey to the hill temple and for the backstage roles they play at home.  To look upon women in the age group of 10 to 50 as suffering some inequality or injustice here is to blindfold reality.  

A Constitution and a law will evoke respect among men and women it is meant to serve if it reflects the peaceful aspirations of those people.  The law contained in the Sabarimala judgement doesn’t score high marks on this touchstone – because the Sabarimala temple is perceived in the mind of Hindu men and women differently from other temples, even other Ayyappa temples. There are about 1,000 other temples for Lord Ayyappa which all women freely visit.  But the Lord’s deity in Sabarimala temple is believed to be in the form of a naisthik brahmachari (an eternal celibate), and legend says that the mode and manner of worship at this temple was revealed by the Lord himself. So, Hindus view the Sabarimala deity and its rules of worship uniquely, though they may not explain their sensibilities in cold logic to the satisfaction of an inquiring court. You will appreciate this better with an example.

If a mad government or temple administration bans the entry of women of any age group in Ramanathaswamy temple at Rameswaram, or Kashi Vishwanath temple at Varanasi, Indian women are not going to take it. Nor will Indian men. And, when that happens, if the supreme court steps in and overturns the ban, that verdict is going to be hailed by all women, and men too.  Do you now get an idea of the different perceptions of Hindus about their different Gods?

To be sure again, sensible persons don’t expect the law to stand aside and permit every action or practice prevalent in a society on the strength of a religion, even if it hurts others unfairly and cannot survive in modern times.  Law has to do its pruning on such actions or practices, wherever it nurtures people’s mental health, unity, freedom and happiness - as was done with the abolition of sati or with the codification of the Hindu law. As in good pruning, law makers should know where and how far to click their scissors and where to stop.

The Sabarimala judgement could also trouble Hindus for a psychological reason, in the environment they live in.  Indian law, law enforcers and politicians treat adherents of alien minority religions more indulgently and respectfully, and they have privileges that are denied to Hindus in the land of their forefathers.  With all this, when Hindus witness on the ground more of antipathy and conversion agents from other religions fiercely at work, any sort of hit Hindus take from the State gives them more hurt than the real blow. So, Hindus deserve some sympathy and a soothing touch at this time from fellow Hindus.  Now let us move on.

Where do we go from here? Hindu women aged 10 to 50 have something to do – the very young ones will of course be advised by adult women in the family.  If a third person has to view them as genuine and serious with their long-held Sabarimala faith and practices, they just have to keep off Sabarimala temple till they reach 50 as they did before the supreme court verdict. As long as they do this, their sense of pride and dignity about their religious beliefs will shine more than before.  If a few women in that age group will be seen in Sabarimala temple from now on, it makes no difference – that scene will only highlight the fact many are not coming.  If abstainers can stick to their resolve they stand taller for what they assert on their wish or belief. Succeeding generations can take their call, as the present generation has done for itself. Fair enough?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018


Wednesday 19 September 2018

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: ராஜிவ் கொலையாளிகள் வாழ்க வாழ்கவே!



அசட்டுத்தனம், பைத்தியக்காரத்தனம், பொல்லாத்தனம், இந்த மூணும் சேர்ந்தா எப்படி இருக்கும்னு நினைக்கறேள்? பதில் சொல்றதுக்கு பெரிசா கற்பனைலாம் பண்ணிப் பாக்க வேண்டாம். அதுகள் மூணும் ஒண்ணா கலந்து, ரத்தமும் சதையுமா உருவெடுத்து, ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், ராமதாஸ், விஜயகாந்த், வைகோ, திருமாவளவன், இப்படில்லாம் பேர் வச்சுண்டு இருக்காளே? இந்த மாதிரி மனுஷாதான் ராஜிவ் காந்தி கொலையாளிகள் ஏழு பேருக்கும் தண்டனை குறைப்பு செஞ்சு அவாளை  ஜெயில்லேர்ந்து இப்பவே விடுவிக்கணும்னு உருகி உருகி கேக்கறா.

விவேகம் இல்லாம ஒரு காரியம் பண்ணினா அது அசட்டுத்தனம். பாக்கறவா, கேக்கறவா சிரிக்கற மாதிரி நடந்துண்டா அது பைத்தியக்காரத்தனம். மத்தவாளுக்கோ சமூகத்துக்கோ அநாவசியமா தீங்கு பண்ணினா அது பொல்லாத்தனம். சொல்லுங்கோ, இது உண்மையா இல்லையா? இது சரின்னா, இந்த குணாதிசயங்கள் உள்ளவாதான ராஜிவ் கொலையாளிகளுக்கு விடுதலை கேக்கறவா?

ஒரு தேசத்து முன்னாள் பிரதமரை அரசியல் காரணத்துக்காக திட்டம் போட்டு கொலை பண்றது, அதுவும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் மனித வெடிகுண்டை அனுப்பி கொடூரமா படுகொலை பண்றது, எவ்வளவு பெரிய அட்டூழியம், அராஜகம்? ராஜிவ் காந்தி கொலை நிகழ்ச்சியை இப்ப நினைச்சுப் பார்த்தாலும் பக்குனு இருக்கே? அதுல நமக்கு இருக்கற ஒரு ஆறுதல் - அந்தக் கொலை வழக்குல அபாரமா துப்பு துலக்கி குற்றவாளிகளை கண்டுபிடிச்ச சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு. இந்தியர்கள் எல்லாரும் அந்த குழுவுக்கு மானசீகமா நன்றி சொல்லணும். 

உலகத்தரமான ஒரு புலன் விசாரணை பண்ணி, அதுவும் நம்ம நாட்டுல நடத்தி, அதுவும் தமிழ் நாட்டுல உக்காந்துண்டு செயல்பட்டு, இந்தியாவுல இருந்த கொலைக் குற்றவாளிகளை தப்பவிடாம கண்டுபிடிச்சு தண்டனையும் வாங்கி குடுத்த சி.பி.ஐ போலீசை எத்தனை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் மனமார பாராட்டிருப்பா? நினைச்சா வெக்கமா இருக்கு.

தேசத்தை உலுக்கின ஒரு சிக்கலான வழக்குல, அந்த சிறப்பு புலனாய்வு குழு ஜெயிச்சு நாட்டு மானத்தையே காப்பாத்திருக்கு. அந்த சமயத்துல தமிழ் நாட்டுல யார் யாருக்கு என்ன தொடர்பு உண்டு, எங்க எப்படியான ஆதரவு இருந்ததுன்னு தெளிவா இல்லாத சூழ்நிலைல, சிறப்பு புலனாய்வு குழு இவ்வளவு நேர்த்தியா வழக்குல வெற்றி அடையும்னு யாரும் நினைச்சிருக்க மாட்டா. என்னைக் கேட்டா அந்த சி.பி.ஐ சிறப்பு புலனாய்வு குழு தலைவர் கார்திகேயனுக்கு பாரத ரத்னா பட்டம் குடுக்கணும்னு சொல்லுவேன். ஏன்னா அவர் தலைமையும் மேற்பார்வையும் துல்லியமா முடிச்சது, லேசுப்பட்ட காரியமில்லை. பிரும்மாண்டமான சாதனை.  அது நம்ம நாட்டு பிரதமர் நமக்கு முக்கியம்னு எல்லார்க்கும் உணர்த்தி, நம்ம போலீஸ் துறையோட பெருமையை உலக அளவுல உயர்த்தி பிடிச்சது. சரி, இப்ப நீங்க எதுக்கு சிரிக்கறேள்? ஓஹோ... புரியறது! அந்த ஏழு குற்றவாளிகளுக்கும் பாரத ரத்னா குடுக்கணும்னு சில தலைவர்கள் கேக்காம இருந்தா அதுவே பெரிசுங்கறேளா?

ராஜிவ் காந்தி கொலை வழக்கோட சிறப்பு புலனாய்வு குழுவை பத்தி நீட்டி முழக்கறதுக்கு காரணம் இருக்கு. நம்ம நாட்டோட பெருமை நம்ம பிரதமர் ஸ்தானத்தோடயும் ஒட்டிண்டு வரும். நம்ம பிரதமர் ஸ்தானத்தை மதிக்காத ஒரு இந்தியன் நம்ம நாட்டையும் மதிக்காதவன்னுதான் அர்த்தம். நம்ம நாட்டை லட்சியம் பண்ணாம, நம்ம பிரதமர் ஸ்தானத்தையும் உதாசீனம் பண்றவாதான், அந்த சிறப்பு புலனாய்வு குழுவோட வெற்றியையும் உணர முடியாதவா. அதுனாலதான் அந்த மாதிரி மனுஷா வெக்கமே இல்லாம ராஜிவ் கொலையாளிகளை முன்கூட்டியே வெளில விடணும்னு கேக்கறா. 

         ராஜிவ்  கொலை  வழக்கு  சுப்ரீம்  கோர்ட்டுக்கு வந்தபோது கோர்ட் என்ன சொன்னது தெரியுமா? ராஜிவோட பதினாலு பேரை மேலோகத்துக்கு அனுப்பின குண்டுவெடிப்பு, தடா சட்டப்படி ஒரு பயங்கரவாத செயல் இல்லை, மத்த சதாரண கொலை வழக்குகள் ரகத்தை சேர்ந்ததுன்னு சொன்னது. அப்பறம், ஏழு கொலையாளிகள்ள மூணு பேருக்கு ஆயுள் தண்டனை குடுத்து நாலு பேருக்கு மரண தண்டனை விதிச்சது. பின்னால, அந்த நாலு பேர்ல ஒருத்தரோட மரண தண்டனையை தமிழக கவர்னர் ஆயுள் தண்டனையா குறைச்சார். அதுக்கு அப்பறம், மீதி மூணு பேரோட மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட்டே ஆயுள் தண்டனையா குறைச்சது - ஏன்னா அந்த குற்றவாளிகளோட கருணை மனுவை பைசல் பண்றதுக்கு மத்திய அரசு பல வருஷங்கள் எடுத்துண்டதாம்.

          சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பின்னாடி தண்டனைக் குறைப்புன்னு இத்தனை நடந்திருக்கே, இது என்ன ஏதுன்னு புரியறதா உங்களுக்கு? எனக்கு தலைய சுத்தறது. உங்களுக்கு எது சரி சரியில்லைன்னு புரிஞ்சா பேசாம இருங்கோ. புரியாட்டாலும் பேசாம இருங்கோ. இப்படியே போனா, இந்த ஏழு குற்றவாளிகளும் சீக்கிரம் விடுதலை ஆனாலும் ஆகலாம். அதுக்கப்பறம் அவாளுக்கு தியாகிகள் பென்ஷன் கிடைக்கலாம். மெரினால சிலையும் வைப்பாளோ என்னவோ! சரி, மெயின் விஷயத்துக்கு வருவோம். 

ராஜிவ் கொலைக் கைதிகள் ஏழு பேருக்கு இப்ப விடுதலை கேக்கற அரசியல் தலைவர்கள் அதை நியாயப்படுத்தி என்ன சொல்றா, என்ன சொல்ல முடியும்? 'சுப்ரீம் கோர்ட் ரொம்ப ஜாஸ்தியா தண்டனை குடுத்திருக்கு. யாருக்கும் தூக்கு தண்டனையே குடுத்திருக்கக் கூடாது. ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துல, போலீஸ்காரா மத்த மனுஷான்னு சேர்த்து மொத்தம் பதினைஞ்சு பேர் உடல் சிதறி இறந்தாலும், எல்லாக் கொலைக்கும் மொத்தமா பன்னண்டோ பதினாலோ வருஷம் ஜெயில் தண்டனைதான் அந்த ஏழு குற்றவாளிகளுக்கும் குடுத்திருக்கணும். ஆனா பாவம், அவாளுக்கு ஆயுள் தண்டனை கிடைச்சது மட்டுமில்லை. ஆயுள் தண்டனைன்னா, ஆயுள் பூரா சிறை தண்டனைன்னு கிறுக்குத்தனமா தப்பர்த்தம் பண்ணிண்டு இந்த ஏழு பேரையும் இருபத்தி ஏழு வருஷமா ஜெயில்லயே வச்சிருக்கறது அநியாயம். அவா படற பாட்டை நினைச்சா அழுகை அழுகையா வரது. அதுனால, அவாள்ளாம் இப்பவாவது விடுதலை ஆகணும்.’ இதைத்தான விடுதலை கேக்கறவா ஒரு நியாயமா சொல்ல வரா? ஆனா மத்தவா நம்பறா மாதிரியும், நியாயத்தை உணர்ரா மாதிரியும் விடுதலை கேக்கறவாளுக்கு பேசத் தெரியலை.

விடுதலை கேக்கறவா ஒரு காரியம் பண்ணினா, அவா பக்கத்து நியாயம் இன்னும் பளிச்சுன்னு நேர்மையானதா தெரியும். என்னன்னா, அவா கூட்டா இப்படி ஒரு அறிக்கை விடணும்: "முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை நாங்கள் நேசிக்கிறோம். ஆனால் அவரது கொலையில் சம்பத்தப்பட்ட குற்றவாளிகளை வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருப்பது நீதிக்கும் மனித நாகரிகத்துக்கும் முரண் ஆனது.  ஒரு சராசரி குடிமகனோ பிரதமரோ, பதவியில் இருக்கிறாரோ இல்லையோ, எந்த ஒரு மனிதர் கொலையுண்டாலும், எத்தனை பேர் ஒரே சம்பவத்தில் கொலையானாலும், இந்த மனித நேய தத்துவம் பொருந்தும். எங்கள் சிந்தனையின் நேர்மையை வலியுறுத்த இன்னொன்றையும் சொல்கிறோம். எங்களில்  யாராவது பயங்கரவாதத்தாலோ சாதாரண குற்ற செயல் மூலமாகவோ உயிர் இழந்தால், அதை ஏற்படுத்தும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கூடாது. அந்த குற்றவாளிகளுக்கு அதிக பட்சம் பதினாலு வருடங்கள் சிறை தண்டனை வழங்கினால் போதுமானது. இது போக, தந்தை ராஜிவ் காந்தியின் கொலையாளிகளை மன்னித்த ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை நாங்கள் குறிப்பிடுவது வீண் பேச்சல்ல என்பதையும் தெளிவு படுத்த விரும்புகிறோம். ராஜிவ் காந்தி போல் எங்களுக்கும் ஒரு அகால முடிவு நேர்ந்தால், எங்களின் எதிர்கால கொலைக் குற்றவாளிகள் எவரையும் அன்புடன் மன்னிக்குமாறு எங்கள் குழந்தைகளை இப்போதே கேட்டுக் கொண்டுள்ளோம். வாழ்க மனித நேயம்."

    விடுதலை   கேக்கறவா   இப்படி   ஒரு   அறிக்கை   குடுத்து எதிர்ப்பாளர்கள் வாயை அடைக்கலாம். ஏன் மாட்டேங்கறா? விளங்க வைப்பா விக்னேஸ்வரா!

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018



Tuesday 11 September 2018

ராஜிவ் காந்தி கொலை. குற்றவாளிகளுக்கு ஏன் விடுதலை?


“நளினியோடு முருகனுக்கும் சாந்தனுக்கும் விடுதலை!" என்று பாடியபடி முன்னணி தமிழக அரசியல் தலைவர்கள் கூத்தாடிக் கோரிக்கை வைக்காமல் இருப்பதுதான் குறை. மற்றபடி ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான அந்த மூவர் உட்பட ஏழு பேரையும் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும், அதற்காக தமிழக கவர்னர் அரசியல் சட்டத்தின் கீழ் தண்டனைக் குறைப்பு செய்து அவர்கள் விடுதலை ஆக உத்தரவிட வேண்டும் என்று இந்தத் தலைவர்கள் வலுவாகக் கேட்டிருக்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, ம.தி.மு.க கட்சித் தலைவர்களும் இதில் அடக்கம். இதில் ஒருவரை ஒருவர் மிஞ்சிப் பெருமை தேடவும் பார்க்கிறார்கள்.

தமிழக பா.ஜ.க-வும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த அபஸ்வர கோஷ்டி கானத்தில் சேரவில்லை என்பது ஆறுதல். ஆனால் தாராளமான மெஜாரிடி ஓட்டு சதவிகிதத்தை தங்கள் வசம் கூட்டாக வைத்திருக்கும் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளும் ஒரு முன்னாள் பிரதமரின்  கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை விடுவிக்க குரல் கொடுப்பது தமிழகத்தின் அரசியல் நல்லொழுக்க சீரழிவிற்கு சாட்சி.  

ராஜிவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தபோது அவர் எடுத்த நடவடிக்கைக்காக அவரை பின்னாளில் படுகொலை செய்வது நமது நாட்டின் மீதே தாக்குதல் நடத்துவதற்கு சமம். அந்த பாதகச் செயல் வெளிநாட்டு  தீவிரவாதிகளால் திட்டமிடப்பட்டு அவர்களின் தமிழக கூட்டாளிகள் துணையோடு இந்திய மண்ணிலேயே குரூரமாக நிறைவேற்றப் பட்டது. ந்தக் குற்றத்திற்காக தண்டனை அடைந்து ஜெயிலில் உள்ள அந்தக் கயவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஒரு இந்தியக் குடிமகன் கேட்பது அவனுக்கு இழுக்கு. அதை ஒரு இந்திய அரசியல் தலைவர் நினைத்துப் பார்ப்பதே அவருக்கு மானக்கேடு. அதற்கு ஒரு அரசாங்கம் செவி சாய்த்தால் அது தனக்கே செய்துகொள்ளும் துரோகம். இதில் இரண்டாவது, தமிழகத்தில் தடபுடலுடன் பரவலாக வெளிவந்துவிட்டது.  மூன்றாவது, தமிழக கவர்னரின் முடிவைப் பொறுத்தது. தற்போதைய இந்தியாவின் பொது வாழ்க்கையில், அதுவும் அரசியல் நிகழ்வுகளில், நல்லதோ சரியானதோ நடக்கும்வரை அப்படி நடக்கும் என்று ஆணித்தரமாக சொல்ல முடியாது.

தமிழக தலைவர்கள் விடுக்கும் கோரிக்கையின் மஹா அபத்தத்தை அழுத்தமாக புரிந்துகொள்ள ஒரு கற்பனையான உதாரணத்தை நினைத்துப் பார்க்கலாம். தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, மற்றும் பல தமிழக பொடிக் கட்சிகளின் பிரதான தலைவர்கள் யாராவது இந்திய பிரதமர் ஆனார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  தேவ கௌடாவே பிரதமர் ஆன பிறகு யார்தான் பிரதமர் ஆக சாத்தியமில்லை? சரி, அந்தக் கற்பனை பிரதமரின் பதவிக் காலம் முடிந்த பின், துரதிர்ஷ்டமாக   ஒரு அண்டை நாடு மற்றும் வேறு ஒரு  இந்திய மாநிலத்தின் பல கிரிமினல்களின் கூட்டு சதியால் அவர் படுகொலை செய்யப் பட்டார் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் குற்றத்தில் பிடிபட்ட பத்து பேர்கள் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லி அவர்கள் இப்போது டெல்லி திகார் ஜெயிலில் ஆயுட்கால தண்டனை அனுபவிக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்றால் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க போன்ற கட்சிகளின் தலைவர்கள் அந்த பத்து குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு கேட்பார்களா ? மாட்டார்கள்.

மேலே சொன்ன உதாரண நிகழ்ச்சியில், அந்த பத்து குற்றவாளிகள் சிலரின் சொந்த மாநிலத் தலைவர்கள் அப்படி விடுதலை-கோரிக்கை எழுப்பினால், நமது தமிழக தலைவர்கள் வெகுண்டெழுவார்கள் இல்லையா? ’அப்படியான  கோரிக்கை ஏற்கப்பட்டால், இந்தியாவின் சுய பெருமிதம், நமது மக்களின் தேசப்பற்று ஆகிய பண்புகளை காலில் மிதித்து, நம்மை நாமே உலக நாடுகள் பார்வையில் கேலிக்கு உள்ளாக்குகிறோம்’ என்று தமிழக தலைவர்கள் அப்போது சரியாக ஆட்சேபிப்பார்கள். இப்போது அசல் ஏழு குற்றவாளிகளுக்கு விடுதலை கேட்கும் தமிழக தலைவர்கள், அந்த உதாரணத்தின் பத்து குற்றவாளிகளுக்கு விடுதலை கூடாதென்று ஏன் சொல்வார்கள்? ஏனென்றால், இப்போதும் அப்போதும் இது போன்ற தமிழக தலைவர்களுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லை, பெருமையும் கிடையாது. ஓட்டின் மீதுதான் ஆசையும் கவனமும். அதிலும், இப்போதைய கோரிக்கையானது அவர்களின் முறுக்கிய கண்ணோட்டத்தின், தவறான கணிப்பின் விளைவுதான்.

         தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க மற்றும் சில குட்டிக் கட்சிகள் தமிழகத்தின் மிகப் பெரிய ஓட்டு சதவிகிதத்தை கூட்டாக வைத்திருக்கலாம்.  ஆனால் அவர்களின் ஒவ்வொரு ஒருமித்த நடவடிக்கைக்கும் அதே சதவிகிதத்தில் தமிழக மக்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ளது என்று அர்த்தமல்ல. 

“இது மக்கள் கோரிக்கை, மக்கள் விருப்பம்” என்கிறார் அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு மாநில அமைச்சர். ஏழு குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டால் “அனைத்து தமிழர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்கிறார் தி.மு.க-வின் புதிய தலைவர். இது பித்தர்களின் பிதற்றல். தமிழக மக்களின் கவலைகளும் பிரச்சனைகளும் வேறு.

ஏற்கனவே ’தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாகி வருகிறது, நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் போலிஸ் நிலையங்களுக்கு கூட போகமுடியவில்லை’ என்று சாதாரண மக்கள் தமிழகத்தில் காலம் தள்ளுகிறார்கள். தமிழகத்தில் செல்வாக்கான அமைச்சரில் இருந்து, டி.ஜி.பி-யான காவல் துறையின் தலைவரே குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ-யால் இப்போது ரெய்டு செய்து விசாரிக்கப் படுகிறார்கள். மாநிலத்தின் ஒரு முதல்வர் முறைகேடாக சொத்து குவிப்பு செய்தார் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டே ஊர்ஜிதம் செய்தது. கெட்டிக்கார எதிர்க்கட்சியினர் ஊழல் தடுப்பு சட்டத்தின் பிடியிலிருந்து லாவகமாகத் தப்பித்து கொழிக்கிறார்கள். மாநிலத்தின் இந்த பரிதாப நிலைமையில், அதன் காரண கர்த்தாக்களின் பிடியில், அவதிப்படும் தமிழக மக்கள் அனைவரும் என்ன சிந்தனையில் இருப்பார்கள்? ‘இப்போது ராஜிவ் கொலைக் குற்றவாளிகளும் வெளி வருவதுதான் நியாயம். அப்போதுதான் மக்கள் மேலும் பாதுகாப்பாக குதூகலமாக உணரமுடியும்’ என்று நினைப்பார்களா?  அதுவும் கொலை என்ற வெறும் சொல்லே சாதாரண மக்களுக்கு மன அசௌகரியத்தையும் சற்று அச்சத்தையும் ஏற்படுத்தும் போது?

டேவிட் ஹெட்லி என்கிற பாகிஸ்தானிய-அமெரிக்கன் ஒரு லஷ்கர் பயங்கரவாதி. 2008-ம் வருடம் நடந்த மும்பை குண்டுவெடிப்புக்கான திட்டமிடுதலில் அவனுக்கும் பங்கு இருந்தது. அந்த பயங்கரவாத தாக்குதலில் 164 பேர் உயிர் இழந்தார்கள். அந்த படுகொலைகளுக்காக, அமெரிக்கா அவன் மீது சிகாகோ நகர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 2013-ம் வருடம் அவனுக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தது. அவன் வழக்கு விசாரணையில் முழுவதுமாக ஒத்துழைத்து எல்லா உண்மைகளையும் கக்கியதால், அந்த நாட்டு சட்டமுறைப்படி அவனோடு செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில், மரண தண்டனையை தவிர்த்து குறைவாக அவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை 35 ஆண்டுகள்.

இந்தியாவில் நடந்த ஒரு குண்டுவெடிப்புக்காக அமெரிக்கா டேவிட் ஹெட்லி மீது ஏன் வழக்கு தொடுக்க வேண்டும், அதுவும் தன் நாட்டில்? ஏனென்றால், மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 164 நபர்களில் ஆறு பேர் அமெக்க குடிமகன்கள்.  தனது  சாதாரண குடிமகன் ஒருவன் பயங்கரவாத தாக்குதலில் வெளி நாட்டில் உயிர் இழந்தாலும், குற்றவாளியைப் பிடித்து தண்டிக்கிறது அமெரிக்கா. தனது 52-வது வயதில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற டெவிட் ஹெட்லி, 87 வயது வரை உயிருடன் இருந்தால் வெளி வரமுடியாது. அந்த நாட்டு அரசியல் தலைவர்கள் டேவிட் ஹேட்லி முன் கூட்டியே விடுதலை செய்யப் படவேண்டும் என்று கேட்க மாட்டார்கள்.  அவர்கள் சூடு சொரணை  சுய கௌரவம் உள்ளவர்கள். ஆனால் நமது முன்னாள் பிரதமர் ஒருவர் நமது நாட்டிலேயே பயங்கரவாதிகளால் தீர்த்து கட்டப்பட்டாலும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கோர்ட் விதித்த தண்டனையை இன்னும் குறைத்து அவர்களை விடுதலை செய்யுமாறு கேட்கும் தமிழக தலைவர்களே – நீங்கள் ஏன் வெட்கத்தையும் விட்டு விவஸ்தையும் கெட்டீர்கள்?

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018

Friday 10 August 2018

கருணாநிதியைப் பற்றிய கணக்கு



அரசியலில் அறுபது ஆண்டுகள் நீடித்து, இடையில் ஐந்து முறை மாநில முதல்வராகவும் பொறுப்பேற்று, தமிழ் நாட்டில் ஒரு தனி முத்திரை பதித்திருக்கிறார் மறைந்த திரு. மு. கருணாநிதி. 

சலியாத உழைப்பு, ஆழ்ந்த மதியூகம், மனோதிடம், பேச்சிலும் எழுத்திலும் திறமை, தன்னோடு சேர்ந்தவர்களை அணைத்து தன் பலத்தைப் பெருக்குதல் என்ற அவரது தனிப்பட்ட சிறப்புகளைப் பார்த்து அனைவரும் கற்கலாம். ஆனால் அவரது வேறு குணங்களும் கவனிக்க வேண்டியவை, இன்னும் முக்கியமானவை.

 கருணாநிதி தனக்கும் தன் பெயருக்கும் குவித்த அபார வெற்றிக்கு, குறைந்த பட்சம் தொண்ணூறு சதவிகித மார்க்குகள்  தரலாம். தமிழக முன்னேற்றத்துக்கும் பொதுவாழ்வின் தூய்மைக்கும் அவர் அளித்த பங்கிற்கு அதிக பட்சம் பத்து சதவிகித மார்க்குகள் போடலாம். ஏன் இந்த வேறுபாடு?

விவரம் அறிந்த மக்கள் மிகக் குறைவாகவும் பாமர மக்கள் – படித்த பாமர மக்களும் சேர்த்து – மிக அதிகமாகவும் உள்ள ஜனநாயக நாடு இந்தியா.  பாமர மக்களைக் கவராமல் எந்த ஒரு அரசியல்வாதியும் இந்திய அரசியலில் தலை எடுக்க முடியாது, பெரிய தலைவனாக வளர முடியாது. அவர்கள் மனதை வெல்ல, முதலில் அவர்களுக்கு புரியும் மொழியில், தொனியில் அவர்களோடு பேச வேண்டும். பின்னர் இரண்டில் ஒன்றைச் செய்யவேண்டும். அதாவது, நசுக்கும் வாழ்க்கைத் தரத்திலிருந்து தாங்கள் விடுபட்டு முன்னேற  ஒரு தலைவன் பாதை போடுகிறான் என்கிற நம்பிக்கை மக்களுக்குள் எழச் செய்யவேண்டும். இது கடினமானது. பரிசுத்தமான உள்ளம், மக்களுக்காக அர்ப்பணிப்பு, நெஞ்சுரம், தொலை நோக்கு சிந்தனை, பல்துறை அறிஞர்களையும் ஈர்க்கும் சக்தி, அரசியல் கெட்டிக்காரத்தனம் ஆகிய குணங்கள் ஒரு அரசியல் தலைவனிடம் அமைந்தால்தான் இது சாத்தியம். எந்த பாமர தேசத்திலும் இந்த குணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தலைவனிடம் சாதாரணமாக அமைவதில்லை. பாமர மக்களை கவர்வதற்காக இந்தக் கடினமான காரியத்தை ஒரு அரசியல்வாதி செய்ய முடியவில்லையா? அவனுக்கு வேறு ஒரு வழி உண்டு.  அது என்னவென்றால்:

தித்திக்க தித்திக்க பேசு, மக்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடு, மொழி வெறியை ஊட்டு, வேற்று மொழிக்காரர்களிடம் மக்கள் பலியாகாமல் அவர்களைக் காக்கும் காவல் தெய்வம் நமது தலைவர்தான் என்று அவர்களை நம்ப வை, தன் காலில் நிற்கும் எண்ணத்தை வளர்க்காமல்  தலைவனின் அரவணைப்பில் உட்கார்ந்திருப்பதே உன்னதம் என்று மக்களை நினைக்கச் செய். இவ்வாறு செய்தால், பாமர மக்கள் தங்களது முன்னேற்றத்தை எண்ணிப் பார்ப்பதைவிட தலைவனுக்காக உருகுவதில் மயங்கிக் கிடப்பார்கள் அல்லவா? இந்த வழியின் பலன்களை நன்கு உணர்ந்து அதில் வித்தகம் செய்து பாமர மக்களிடம் வாகை சூடியவர் கருணாநிதி. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த வழி எளிதாகத் தோன்றலாம். ஆனால் அசாத்தியமான மதிநுட்பமும், மனோதத்துவ அறிவும் சில விசேஷ தனிமனித குணங்களும் இயற்கையாகவே ஒரு தலைவனுக்கு அமைந்தால் தான் இந்த தந்திரங்கள் அவனுக்குப் புலப்படும், கைகூடும். கருணாநிதி இதில் நிகரற்றவராக விளங்கினார்.

அடுக்குமொழித் தமிழ் பேசி சாதாரண மக்களைக் கவர்ந்த திராவிட அரசியல் தலைவர்கள், மக்கள் வேறு மொழியைக் கற்றால் தங்கள் பிடியிலிருந்து நழுவிப் போவார்களோ என்ற அச்சத்தால் இந்தி எதிர்ப்பைச் செய்து தமிழைக் காப்பது போல் தங்கள் மந்தைகளைக் காத்துக் கொண்டார்கள். இந்தியப் பிரதேசங்களில் சமஸ்கிருதம் வெகுவாகப் பரவி இருந்த முற்காலத்தில் யாரும் சமஸ்கிருத எதிர்ப்பு செய்து தமிழைப் பாதுகாக்கவில்லை. பின்னர் வெள்ளைக்காரர் ஆட்சியில் நுழைந்த ஆங்கிலம் இங்கு நிலைத்தாலும் தமிழை வதம் செய்யவில்லை. தற்காலத்தில் இந்தியை ஒரு கூடுதல் மொழியாகப் பயில்வதால் மட்டும் தமிழ் தேய்ந்துவிடாது - தமிழர்களுக்குத்தான்  வேலை வாய்ப்பும் வளர்ச்சியும் அதிகம் கிடைக்கும். இருந்தாலும் இந்தி திணிப்பு என்ற மாய பூதத்தால் மக்களை  அச்சுறுத்தி வளம் கண்டார் கருணாநிதி. 

முக்கிய திராவிட கட்சிகளுக்கு இந்தி எதிர்ப்பினால் பின்னாளில் ஒரு குரூரமான அரசியல் லாபமும் கிடைத்தது. இந்தக் கட்சிகள் தமிழ் நாட்டில் நிறைய எம்.பி-க்களை பெற்றுக்கொண்டு, டெல்லித் தலைமை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து மத்திய அரசில் கொழு கொழுவென்ற மந்திரி பதவிகள் பெற்றார்கள். அதன் மூலம் என்னென்னவோ பெற்றார்கள். ஆனால் டெல்லிக் கட்சிகளின் தலைவர்கள் வட நாட்டில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்தால் மக்களிடம் பேசி பெயர் வாங்குவது எளிதல்ல என்று ஆக்கிவிட்டார்கள். வடநாட்டுத் தலைவர்களுக்கு தமிழ் தெரியாது. தமிழ் நாட்டு மக்களுக்கு இந்தி புரியாது. ஆகையால் வட நாட்டுத் தலைவர்கள் தமிழ் நாட்டில் வளர ஆசைப்படக் கூட முடியாது. திராவிட கட்சித் தலைவர்கள் டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ஆகி எப்படியெல்லாமோ வளரலாம். பகுத் அச்சா! வாழ்க தமிழ்!

       பாமர மக்களை மதி மயக்கி, அதில் கிடைத்த சக்தியால் கட்சியின் பிற தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் தொடர்பில் வந்த மனிதர்களை 'இவர் எப்போது எந்த விதத்தில் நம்மைப் பழி வாங்குவாரோ? ஒதுங்கி சமாளிப்போம் அல்லது ஒத்து ஊதி முன்னேறுவோம்' என்று நினைக்க வைத்து கட்சியையும் ஆட்சியையும் நடத்தியவர் கருணாநிதி. அதற்குப் போட்டியாக வந்து, பணியாதவர்களையும் படியாதவர்களையும் முகத்தில் அறைந்து கட்சியிலும் ஆட்சியிலும் அமர்ந்திருந்தவர் ஜெயலலிதா. நமது அசட்டு ஜனநாயகத்தில் இரண்டும் சாத்தியம் ஆனது.

ஜெயலலிதா, அடிமைகள் பின்தொடர அரசியல் செய்தார். கருணாநிதி, துதிபாடிகள் சூழ அரசியல் செய்தார். ஒருவரை ஒருவர் காரசாரமாக எதிர்த்தார்கள்.  அரசாங்க செல்வத்தையும் மக்களின் வளர்ச்சியையும் கரையானாக அரிக்கும் ஊழலை இருவரும் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. ஏன் என்று நாம்தான் ஊகித்துக் கொள்ள வேண்டும்.

தன் கட்சியினர் மீது கவனம் செலுத்தாமல், எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது மட்டும் ஆதாரங்களுடன் ஊழல் வழக்குப் போடுவதை நாம் எதிர்க்கக் கூடாது. ஜெயலலிதாவிற்கு எதிராக சுப்பிரமணிய சுவாமி துவங்கிய சொத்துக் குவிப்பு வழக்கை கருணாநிதி அரசு கையிலெடுத்து நகர்த்தியது. அது சரிதான், நல்லதுதான். இருந்தாலும் அதற்கு வேறு அர்த்தங்களும் உண்டு. எதிரியை அரசாங்க செலவில் சட்ட ரீதியாகவே தண்டிக்க எந்தத் தலைவருக்கு கசக்கும்? கருணாநிதி இதில் இமாலய வெற்றி பெற்றார்.  இதன் மூலம் கருணாநிதி என்ன சொல்ல வந்தார்? ’ஜெயலலிதாவின் ஆட்சியின் போதுதான் தமிழ்நாட்டில் ஊழல் நடந்தது, வழக்கு போட்டு ஊழலை நிரூபிக்க வைத்தோம். ஆனால் 1969-ல் ஆரம்பித்து ஐந்து முறை, பத்தொன்பது வருடங்கள், நான் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக இருந்தேனே, அப்போதெல்லாம் காமராஜர் ஆட்சியைப் போல துளியும் ஊழல் வாசனை இல்லாமல் என் அரசு  இயங்கியது’ என்றுதானே மௌனக் காட்சி கொடுத்தார்? இந்தக் காட்சி உங்களுக்கு சிரிப்பைத் தந்தால் நீங்கள் விவரம் தெரிந்தவர்தான். 

     கருணாநிதியின் பெரும் வெற்றிகள் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் கோலோச்சியது, பதிமூன்று முறை எம்.எல்.ஏ-வாக தொடர்ந்து தேர்வானது மற்றும் ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தது. அவரைக் கடைசியாக எடைபோட வேண்டும் என்றால் ஒரு நெடுநாள் அரசியல்வாதியாக, நீண்டநாள் முதல்வராக, பொதுவாழ்வின் தூய்மைக்கும் நன்னெறிகளுக்கும், மாநிலத்தின் நல்லாட்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அவர் முட்டுக் கொடுத்தாரா, முன்னுதாரணமாக இருந்தாரா என்றுதான் பார்க்கவேண்டும். ஏழை நாடான இந்தியாவின் அரசியல் களத்திலும் ஆட்சிப் பொறுப்பிலும் பிரதானமாக இருந்த ஒருவரின் சிறப்புகளுக்கு அவைதான் அளவுகோல். காமராஜர் அப்படித்தான் மதிப்பிடப் பட்டார். அதை விட்டு, மறைந்தவரின் நாவன்மை, மொழிப் பற்று, கவிதைத் திறன், நகைச்சுவை உணர்வு, சினிமா வசனங்கள், ஞாபக சக்தி, கடின உழைப்பு, தனது கட்சிக்காரர்களிடம் காட்டிய தோழமை, அவர் வள்ளுவர் கோட்டம் எழுப்பியது, மணி மண்டபங்கள் கட்டியது போன்ற விஷயங்களை வைத்து அவரை உயர்வாக மதிப்பிட்டு, ஒப்புக்காக அவரின் ஒரு சில அரசியல் நடவடிக்கைகளையும் சேர்த்துச் சொல்வது, நமது நேர்மையற்ற மழுங்கிய சிந்தனைக்கு உதாரணமாக இருக்கும். அதைத்தான் இப்போது பலரும் செய்கிறார்கள். காங்கிரஸ்காரர்களும் இதற்கு விதி விலக்கல்ல.

காமராஜர் திமுக-வையும் அதிமுக-வையும் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்' என்று நறுக்கென்று சொன்னார். இன்றைய காங்கிரஸ்காரர்கள் எப்போதும் காமராஜரையும் போற்றுகிறார்கள், கருணாநிதியையும் புகழ்கிறார்கள். சோனியா காந்தியோ, ’‘கருணாநிதி எனக்கு தந்தை போன்றவர்” என்று இப்போது காரண காரியமாக கசிகிறார்.  கருணாநிதி உயிருடன் இருந்தபோது அவரிடம் சோனியா இதைச் சொல்லி இருந்தால், “அப்படி என்றால் நீங்கள் கனிமொழிக்கு அக்கா! டெல்லியில் உங்கள் தங்கையை நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள்!” என்று கருணாநிதி அப்போதும் ஒரு படி மேல் எழும்புவார். எதுவானாலும், காமராஜர் தலைமை தாங்கிய தமிழக காங்கிரஸ்காரர்களை கருணாநிதி கட்சியிடமே எம்.எல்.ஏ சீட்டுகளுக்கு ஏங்க வைத்தது, கருணாநிதியின் தனிப்பட்ட வெற்றிகளில் ஓன்று. 

ஊழலின் தணலில் இந்தியர்கள் வெந்து தவிக்கிறார்கள் என்பது சட்டம் பார்க்க முடியாத ஊரறிந்த உண்மை. அறுபது ஆண்டுகள் தொடர்ந்த கருணாநிதியின் அரசியல் வாழ்வில், ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்த வருடங்களில், 'ஊழலை ஒழித்து மக்களை மீட்பேன்' என்று அவர் இதய சுத்தியாக முழங்கியதில்லைமுனகியதும் இல்லை. ஊழலுக்கு பெயர் போன தமிழகத்தில், இந்த வினோதத்தை நாம் மறக்கக் கூடாது. இதன் காரணத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.  புரிகிற விஷயம்தான். 

இறந்தவர்களைப் பற்றி இடித்துப் பேசுவது நல்ல பண்பல்ல என்பது தனி மனிதர்களுக்குத்தான் பொருந்தும். பொது வாழ்வில் இருந்தவர்களுக்கு - அதுவும் ஒரு அரசாங்கத்தை பலமுறை நடத்தி மக்களின் தலைவிதியை தீர்மானம் செய்தவர்களுக்கு - இது பொருந்தாது. அவர்கள் மறைந்த பின் பொதுவாழ்வில்  அவர்களின் பங்களிப்பை நேர்மையாக மதிப்பீடு செய்வது ஒரு விமரிசகனின் கடமை அல்லவா?

தமிழக அரசியல் களத்தில் கருணாநிதி பெற்ற வெற்றிகளை வைத்து, அவர்போல் ஒரு  தலைவர் இனி தோன்ற முடியாது என்று பலரும் சொல்கிறார்கள். அது உண்மை. இன்னொரு கருணாநிதி இனி உருவாகாத பெருமையை அவரே வைத்துக் கொள்ளட்டும். இன்னொரு கருணாநிதி வராத அதிர்ஷ்டத்தை தமிழகம் அனுபவிக்கட்டும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2018