Thursday 31 March 2016

Bharat Mata ki Jai – or Bye?


       Lok Sabha member Asaduddin Owaisi of AIMIM has triggered a debate on saying aloud “Bharat Mata ki Jai” (glory to Mother India).  He said the Constitution did not compel anyone to utter those words and he would not chant them. But none of us look for Constitutional compulsions in every single thing we consider right, good or necessary to do.  For instance, if we need to say, the Constitution does not command us to breathe, vote or contest an election.   Let us then look at a few other things.

We all know. There is no god in Hindu religion with the name 'Bharat Mata'.  So it is nothing about a god projected by a religion and recommended to people of other religions. Bharat Mata is just a mental personification of an India held dear in our hearts.  The people, as well as the Constitution, of the country recognise ‘Bharat’ as denoting India. So we get the term Bharat Mata, as a manner of speaking. It is a fine evocative expression too.  Only dull heads with no idea of the beauty or effect of imagery will ask, "How can a country be a mother?"

‘Bharat Mata' is not the only expression people use to cherish their nation, its leaders or its values. Another term heard all over the world is 'father of the nation'.  No one in India objects to Mahatma Gandhi being hailed as the father of our nation.  A political leader who plays a pivotal role in the founding of a nation or in liberating it may be affectionately called by its people as the father of their nation. By tradition, a father protects, nurtures and leads his children to adulthood who then look up to him with respect and gratitude - both of which happened more in earlier times.  Likewise, a leader who devotes his energy and acumen in the evolution of a nation is acclaimed as a father of the nation. In Indian culture a mother is specially loved and respected by her children - yes, more in earlier times - for all her physical sacrifices in giving birth to them and caring for them during their infancy and growing years, with many sleepless nights, and for the lasting emotional bond that she, more than the father, builds with them.  So if you wish to portray a grateful reverence to your nation that is Bharat, no wonder you would call her Bharat Mata.

English people too have associated ‘mother’ with one's country. So they have the word 'motherland'.  For Indians, hailing their nation Bharat Mata is like other nationalities calling their nation motherland. Uttering or hearing the words ‘Bharat Mata’ should evoke in Indians a bonding with the land of their birth, which does not happen with the mere name of India or Bharat or Hindustan, certainly not as deeply. Don't you see the difference between a resounding chant of "Bharat Mata ki Jai" and a lifeless shout of "Hindustan Zindabad"?

Some leaders contend that the slogans "Bharat Mata ki Jai" and "Hindustan Zindabad" mean the same thing and so it is all right if they refuse to utter the former and just say the other. This is a poor robotic argument. What would you say to someone who asserts that gulping a spoonful of plain sugar and relishing a piece of halwa are just the same thing? Tasteless.

Not just a leader, but a country's cherished value too is personified. A shining example of this is New York's Statue of Liberty. It is not a statue for Liberty. It is the Statue of Liberty.  US citizens do not protest the idea of depicting inanimate liberty in the form of a lady.

       Well-publicised news reports quote a noted Indian historian, also a Marxist, as saying, “Bharat Mata has nothing to do with India’s ancient or medieval past.  It is a European import.  Notions of motherland and fatherland were talked about in Europe.” Here is an unstated suggestion that if Indians give up the chanting of ‘Bharat Mata ki Jai’ they would be in tune with their hoary past and would be rid of a present-day controversy.  Even if the historian is right on facts, it is surprising he is so mechanical about the issue and unmindful of positive popular sentiments.  For that matter, Constitutional government has also nothing to do with India’s ancient or medieval past and is a European import, but that is not to be mentioned today disapprovingly in any context.  And then, Marxism propagated in India is also of foreign import, but that cannot be a reason to disagree with that philosophy. If a practice or activity is legally permissible in our public life and is preferred by many but opposed by some, the right question to ask first is if that works to the public good.  Ordinary Indians are emotionally driven, and so a good slogan for the nation with a unifying emotional content is welcome.
           
        It is not that Indian Muslims as a whole object to the chanting of ‘Bharat Mata ki Jai’, which is what Owaisi wants us to believe.  But he is an Indian leader and ordinary people have to fear him, unlike in mature democracies where leaders fear misreading people's minds. Poet and lyricist Javed Akhtar won the hearts of many Indians when he spoke recently in the Rajya Sabha, denouncing Owaisi’s statement and himself chanting ‘Bharat Mata ki Jai’.  This is not to say that Javed Akhtar has given in.  He has recognized the value of that chant for all Indians, and so has gone with it for the good of his nation. But he is not in active politics, and Owaisi is.  Imagine the shot in the arm for Hindu-Muslim brotherhood if Owaisi could say, “For Hindus and Muslims in India, standing together for the glory of India and saying ‘Bharat Mata ki Jai’ is a strong message to ourselves and to the world. It helps us all to march forward and grow”.   

Owaisi is not alone in the art of political maneuvering.  Many other politicians too play it best from their positions.  He is one among several short-sighted leaders from most Indian political parties who have abysmally failed a great nation.  Bharat Mata has a hard journey ahead though many may cheer her.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

Monday 14 March 2016

அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: மல்யா மகாத்மியம்


விஜய் மல்யா சார், ஒரு விமானக் கம்பெனி ஆரமிச்சா அத ஒழுங்கா நடத்தறது எவ்வளவு பிரயோஜனம்னு இப்ப தெரிஞ்சதா? எதுக்கு சொல்றேன்னா, இந்தியாவுலேர்ந்து ஒருத்தர் ராவோட ராவா லண்டனுக்கு ஓடணும்னா ஏதோ ஒரு விமானக் கம்பெனி கடைய மூடாம விமானத்தைப் பறக்க விட்டாத்தான அது முடியும்?

உங்கள நம்பி கடன் குடுத்த பாங்குக் காரா 9000 கோடி ரூபா போச்சேன்னு கையைப் பிசைஞ்சிண்டிருக்கா.  நீங்களோ இங்கிலாண்ட் மாளிகைல ஹாய்யா ரெஸ்ட் எடுத்திண்டிருக்கேள்.  ஒரு நாட்டுல தொழில் பண்ணி பெருசா நஷ்டப்பட்டாலும் தப்பிச்சு வாழறதுக்கு இன்னொரு நாட்டுல ஜரூரா ஏற்பாடு பண்ணிக்கணும்னு  தப்பு தொழிலதிபர்களுக்கு ப்ராக்டிகலா காட்டிருக்கேள். உங்க கம்பெனி திவாலானத விட இது ரொம்பக் கேடு பண்ற உதாரணம்னு எனக்குத் தோண்றது. 

கடன் குடுக்கறவா நீர்மோர் மாதிரி அள்ளி அள்ளிக் குடுத்தா வாங்கிக்கறவா சாப்டுட்டு ஏப்பம்தான் விடுவா.  இதயே நீங்க வேற வார்த்தைல சொல்லி 9000 கோடி நஷ்டத்துக்கு நீங்க பொறுப்பில்லன்னு பேசிருக்கேள்.  “கடன்ல தவர்றது வியாபார விஷயம்.  எல்லா ரிஸ்கும் தெரிஞ்சுதான பாங்க் கடன் குடுத்தது? கடன் குடுக்கறதப் பத்தி நாங்க ஒண்ணும் முடிவு பண்றதில்ல. அவங்கதான் அந்த முடிவை எடுக்கறாங்க” அப்படின்னு விளக்கம் சொல்லிருக்கேள்.  உங்க கெட்டிக்கார வியாக்கியானத்துக்குள்ள ஒண்ணு ரண்டு சோக விஷயமும் இருக்கு.

நீங்க பல பிசினஸ் பண்ணிருக்கேள். அதுல ஒண்ணு கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனி.  அது படுத்துப் போய் பாங்குகளுக்கு ஏற்பட்ட நஷ்டம்தான் இப்ப வரைக்கும் 9000 கோடி. அதாவது, உங்க கம்பெனிக்கு பதிலா அந்த பாங்குகளே ஏர்லைன்ஸ் பிசினஸ் பண்ணி நஷ்டம் அடைஞ்சா மாதிரி நிக்கறதுகள்.  நீங்க பாங்க் பிசினஸ் பண்ணி கடன் குடுத்து இப்படி நஷ்டப்பட்டா என்ன விளக்கம் சொல்வேள்? “கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனிக்கு இந்த அளவுக்கு கடனே குடுத்திருக்க மாட்டேன்.  ஒரு அளவோட நிறுத்திண்டு அதோட சொத்து பத்தெல்லாம் ஏலத்துக்குக் கொண்டு வந்து கடனை முடிஞ்ச வரைக்கும் வசூல் பண்ணிருப்பேன்.  தொழில்னா என்ன, அதுல வர்ர லாப-நஷ்டம் என்ன, ஏறிண்டிருக்க கடன் சுமை என்னன்னு விவரம் தெரிஞ்ச பாங்க் ஆளாத்தான் நான் இருப்பேன்.  சும்மா தூக்கி தூக்கி குடுக்க மாட்டேன்”ன்னுதான் இந்த கேள்வியே எழாம பதில் சொல்லுவேள். இல்ல, வெளில எப்படிச் சொன்னாலும் உள்ளுக்குள்ள இப்படித்தான் நினைச்சுப்பேள்.

”வாங்கின கடனை அடைக்கலயே, பாங்குகளுக்கு எவ்வளவு பெரிய நஷ்டம்?  இது தேசத்துக்கும் நஷ்டமாச்சே”ன்னு துளிக்கூட வருத்தம் உங்களுக்கு இல்லை. ஒரு வேளை, வருத்தப் படறா மாதிரி பேசினா நம்ம பேர்லயும் தப்பு இருக்குன்னு ஆயிடுமேன்னு நினைச்சு ‘பாங்க் நஷ்டத்துக்கு பாங்க்தான் காரணம்’னு சொல்லி பாசாங்கு பண்றேளான்னும் தெரியலை. ஆனா ஒண்ணு – இவ்வளவு பெரிய கடன் பாக்கி நிக்கறதுக்கு பாதிக் காரணம் வாரிக் குடுத்த பாங்குகள்ங்கறதுல சந்தேகம் இல்லை. அவா உங்களுக்கு இன்னும் குடுத்திருந்தாலும் வேண்டாம்னா சொல்லிருப்பேள்? நீங்க அதையும் வாங்கிண்டு நஷ்டத்தை 18000 கோடிக்குக் கொண்டு வந்திருப்பேள். அப்பயும் பாங்க் பட்ட நஷ்டத்துக்கு பாங்க் காரணமே இல்லைன்னா சொல்றது? இப்ப ஏற்பட்ட நஷ்டத்துக்கு பாங்கும் உண்டான பொறுப்பை ஏத்துக்கணும். அதோட உங்க கம்பெனிக்காக பாங்க்க யாராவது ஆட்டி வச்சிருந்தா அவாளுக்கும் பொறுப்பு உண்டு. ஆனா சட்டப் படியோ தார்மிகப்படியோ உங்க பொறுப்பு குறையவே குறையாது.

’நீங்க வேற, உங்க கம்பெனி வேற. கடன் வாங்கினது நீங்க இல்லை, உங்க கம்பெனிதான்’கற சட்ட விஷயம்லாம் இருக்கட்டும். நீங்க கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் கம்பெனி தலைமைல இல்லேன்னா பாங்குகள் இந்த அளவுக்கு அதுக்குக் கடன் குடுத்து நஷ்டப் பட்டிருக்காது. மல்யா மாதிரி ஒரு கைகாரர் கேட்டாத்தான் அவாளும்  யோசிக்காம மலையளவுக்கு கடன் குடுப்பா. இல்லேன்னா இதே மாதிரி நிறைய பேருக்கு நிறையக் குடுத்து பாங்குகளே திவால் ஆயிருக்கணுமே?

கடன் உங்க கம்பெனி வாங்கினாலும் உங்க மவுசுலதான் அது நடந்தது. உங்க மவுசு ரொம்பப் பெரிசுன்னு முன்னாள் பிரதம மந்திரி ஒருத்தர் இருக்காரே, தேவ கவுடா மாமா, அவருக்கு நன்னாத் தெரியும்.  9000 கோடி பாக்கிக்கு உங்க மேல பாங்க் நடவடிக்கை வரப்போறதுன்னு நியூஸ் வந்த உடனே மனுஷர் போட்டார் ஒரு போடு.  “கடன் வாங்கித் திருப்பித் தாராம மத்தவங்க இருக்கும்போது மல்யாமேல மட்டும் எதுக்கு நடவடிக்கை?”ன்னு கேட்டிருக்கார். அதாவது, “நடவடிக்கை எடுத்தா எல்லாக் கடனாளிகள் மேலயும் ஒரே நாள்ள எடுங்கோ. ஒவ்வொருத்தரா ஆரமிச்சா மத்தவா  மேல முடிச்சுட்டு கடைசியா மல்யா கிட்ட வாங்கோ”ன்னு சொல்ல வரார்.  பிரதம மந்திரியா இருந்த ஒருத்தர் “மல்யா மேலயும் சம்பத்தப் பட்டவா மேலயும் கடன் பாக்கி தொடர்பா எல்லா நடவடிக்கையும் எடுக்கணும். அதோட, பெரிய அளவுல பாங்க் கடன் வாங்கி அடைக்காத மத்தவா மேலயும் வசூல் நடவடிக்கை வரணும்”னு பேசினா நன்னா இருக்கும்.  அதை விட்டுட்டு உங்கள தாங்கிப் பிடிக்கறா மாதிரியே பேசறாரே! நீங்களும் சரி அவரும் சரி, ஏதோ 'கொடுத்து வச்சவா'ளாத்தான் இருக்கணும்.

அரசியல்னா பதவி முக்கியம். தொழில்னா லாபம் முக்கியம். அதெல்லாம் மாத்த முடியாது.  ஆனா அரசியல் வழிமுறைகளையும் தொழில் நடத்தைகளையும் சட்டமும் தார்மிகமும் சேர்ந்து சரியா கட்டுப் படுத்தலைன்னா பதவி ஆசையும் லாபக் கணக்கும் நாசத்தைக் கொண்டு வரும்.  உங்க விஷயத்துல அதான் நடந்திருக்கு. இதுல தார்மிகம் விழுந்திருக்கு. சட்டம் எழுந்து நிக்கறதான்னு பாக்கணும்.

* * * * *

Copyright © R. Veera Raghavan 2016

Tuesday 8 March 2016

கன்னையா, என்னையா சொல்றீங்க?


நாங்கள் கேட்டது ”இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவிற்குள் சுதந்திரம்” என்று புதிய விளக்கம் சொல்லி கோஷம் எழுப்பி இருக்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ-வின்) மாணவர் தலைவர் கன்னையா குமார். தேசதுரோக வழக்கில் கைதாகி பிறகு டெல்லி உயர்நீதி மன்றத்தில் பெயில் வாங்கி வெளியில் வந்து அவர் பேசியது இது.   உள்நாட்டு சுதந்திரம் மறுக்கப்படும் நாடானால் அங்கிருந்து இது போன்ற கூக்குரலை ஒருவர் வெளியிட்டிருக்க முடியாது.  அது டெலிவிஷன், செய்தித்தாள்கள் மூலமாக பின்னர் மேலும் பரவியும் இருக்காது. 

அடிப்படை ஜனநாயக சுதந்திரம் ஒரு நாட்டில் இல்லை என்றால் அதற்கான அடையாளங்கள் நன்றாகத் தெரியும்.  அங்கு தேர்தல்கள் பாரபட்சமின்றி நடக்காது. மேலும் அது போன்ற நாட்டில் ஆளும் கட்சியைத் தலைநகரிலேயே தீர்க்கமாக தேர்தலில் வென்று அரவிந்த் கேஜ்ரிவால் போல் முதல் அமைச்சராக முடியாது. அல்லது நாட்டிலேயே அதிகமான அரசியல் அதிகாரங்கள் கொண்ட பிரதம மந்திரியை கன்னையா மாதிரி சவால் விட்டு எக்காளமாக விமரிசிக்க முடியாது. மற்றொரு அடையாளம், ஆட்சியைப் பற்றி குடிமக்கள் துணிவாக விமரிசித்தால் அவர்கள் தொடர்ந்து சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க மாட்டார்கள்.  சீனா, பாகிஸ்தான், ஈராக், கியூபா, சிங்கப்பூர் ஆகிய சில நாடுகளில் இந்த அடையாளங்கள் சிரிதும் பெரிதுமாக உண்டு. இது போன்ற வேறு பல நாடுகளும் உள்ளன. இந்த நாடுகளில் தேசதுரோக வழக்கில் ஒருவர் கைதானால் கோர்ட்டு மூலம் பெயில் கிடைப்பது மிக அரிது.  பெயில் கிடைத்து விட்டாலும் வெளியே வந்துவிட்டு “இந்த நாட்டுக்குள் சுதந்திரம் வேண்டும்” என்று கூட்டமாக நின்று கோஷம் போட்டால் பிறகு அவரைத் தேட வேண்டும். இந்தியாவில் தனி மனித உரிமைகளுக்கு – அதுவும் அரசை எதிர்க்கும் சுதந்திரத்திற்கு – இப்படிக் குறைகள் இல்லை.

நமது நாட்டில் சுதந்திரத்தைப் பற்றிக் குறை உண்டென்றால் அது கட்டுப்பாடில்லாமல் கிடைக்கிறது என்பதுதான் – அதாவது முறையான அரசுக் கட்டுப்பாடோ அல்லது பொறுப்பான சுய கட்டுப்பாடோ இங்கு இல்லை. இவற்றிற்கு வலுவான ஒரு சாட்சி - இந்தியாவில் பல நாசவேலைகள் செய்த தீவிரவாதிகளும் அவர்களுக்குக் கிடைத்து வரும் அரசியல் தலைவர்களின் ஆதரவும்.

கன்னையா குமார் என்ன சொல்ல வருகிறார்? எதிர்க் கட்சித் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால், லாலு பிரசாத், நிதிஷ் குமார், முலயாம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்களுக்கெல்லாம் சுதந்திரத்தை அனுமதித்து விட்டு, ஒரு சில மாணவர்களை மட்டும் மத்திய அரசு கட்டுப் படுத்துகிறது என்கிறாரா?  அப்படி என்றால் அந்தத் தலைவர்களுக்கு நிகரான, அல்லது அவர்களுக்கும் இல்லாத, அரசியல் சக்தி இந்த சாதாரண மாணவர்களிடம் உள்ளதாமா?  ஆம் என்றால் அவர்கள் பல்கலையை விட்டு வெளியே வந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு இன்னும் பெரிதாக வளர முயற்சிக்கலாம்.  ஆம் என்றாலும் இல்லை என்றாலும் பல்கலைக் கழகத்தை விட்டு இந்த மாணவர்கள் வெளியேற வேண்டும்.  ஏனெனில் படிப்பில் ஈடுபட்டு அதற்குண்டான அறிவை வளர்த்துக் கொள்பவர்களுக்கான இடம் அது மட்டுமே.  அந்த ஆர்வம் கொண்டவர்கள் வேறு இடத்தில் அதைப் பூர்த்தி செய்ய முடியாது.  படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டிய வருடங்களில் மாணவர்கள் தீவிரமாக வேறு வேலைகளிலும் – முக்கியமாக அரசியலில் – இறங்கி நேரத்தை விரயம் செய்யக் கூடாது. இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் வளர்சிக்கும் அமைதியாக படிப்பு விஷயங்களில் மட்டும் இயங்கும் பல்கலைக் கழகங்கள் தேவை. ஆளும் கட்சியையும் பிரதம மந்திரியையும் – அது எந்தக் கட்சியோ அவர் எந்த நபரோ - எதிர்த்தோ அல்லது வேறு வகையில் அரசியல் செய்ய விரும்பினால் அதற்கான இடம் வெளி இடம். அந்தப் பெரிய வெளி இடம் கன்னையா குமாருக்கும் அவர் போன்ற ஆர்வம் கொண்ட சக மாணவர்களுக்கும் டெல்லியிலும் இந்தியாவெங்கும் உண்டு.

சிறப்பான ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி போன்ற கல்விக் கூட வளாகங்களில் ஜே.என்.யு-வில் காண்பது போல் மாணவர்களிடையே அரசியல் நாட்டமும் உத்வேகமும் இல்லை. அந்த மாணவர்கள் படிப்பில் மட்டும் குறியாக இருந்து தானும் வளர்ந்து தங்கள் கல்வி நிலையங்களுக்கும் பெருமை சேர்க்கிறார்கள். படிப்பில் முழுக் கவனம் வைத்திருப்பதை விட மாணவர்களுக்கு வேறு முக்கிய வேலை கிடையது. ஆனால் ஜே.என்.யு மாணவர்கள் பத்திரிகைகளாலும் டி.வி-க்களாலும் பேசப்படுவது அம் மாணவர்களின் கல்விச் சிறப்பால் அல்ல. இது ஜே.என்.யு-விற்கு எற்பட்டிருக்கும் நிர்கதி.

இன்னொரு விஷயம். தாங்கள் கோரிய விடுதலையானது பசி, ஏழ்மை, ஊழல், ஜாதிப் பிரச்சினை ஆகியவற்றிலிருந்து மீள்வதற்கான விடுதலைதான் என்று இப்போது மேலும் விளக்குகிறார் கன்னையா. ஆனால் நடந்து முடிந்த நிகழ்சிகள் என்ன காட்டுகின்றன? சென்ற பிப்ரவரி 9-ம் தேதி ஜே.என்.யு வளாகத்தில் நடந்த அஃப்சல் குரு ஆதரவுக் கூட்டத்தின் பின்னணியில்தான் கன்னையா கைது செய்யப்பட்டார். கன்னையாவும் அந்தக் கூட்டத்தில் இருந்தார். அந்த தேதிதான் அஃப்சல் குரு தூக்கிலடப்பட்டு இறந்ததின் நினைவு நாள். அவரைப் போற்றும் விதமாக நடந்த கூட்டத்தில் அஃப்சல் குருவின் படங்களும் பிரதானமாகத் தென்பட்டன.   அஃப்சல் குரு பிரிவினைவாதியாக இருந்தவர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிர் பகுதிக்குச் சென்று அந்த நாட்டு ராணுவத்திடம் பயிற்சி பெற்றவர். பாராளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் அடைக்கலம் தந்து அந்தத் தாக்குதலுக்கு துணை போனவர். அந்த வழக்கில் தான் அவருக்கு மரண தண்டனை கிடைத்து நிறைவேற்றப் பட்டது. இப்படித்தான் அஃப்சல் குரு அறியப்பட்டாரே தவிர இந்தியாவில் பசி, ஏழ்மை, ஊழல், ஜாதிப் பிரச்சினை ஆகியவற்றைப் போக்கப் போராடினார், பாடுபட்டார் என்பது கிடையாது. அவரின் நினைவைப் போற்றும் கூட்டத்தில் எழுந்த விடுதலை முழக்கம் எதற்காக என்பதை பின்னர் வேறு எப்படி விளக்கினாலும் எடுபடுமா என்ன?
  
கன்னையா குமார் வலது கம்யுனிஸ்ட் கட்சியை சார்ந்தவர். அது அவர் விருப்பம். பெயிலில் வந்த அவர் ஜே.என்.யு மாணவர்களிடையே பேசியபோது பிரதமருக்கு எதிராக அரசியல் ரீதியில் வார்த்தைகள் விட்டுமிருக்கிறார். அவற்றில் ஒன்று: “இந்தியாவில் 31 சதவிகிதம் பேரின் ஆதரவுதான் உங்களுக்கு உண்டு. 69 சதவிகிதம் உங்களை எதிர்த்து வாக்களித்துள்ளார்கள்” என்று பிரதமரை நோக்கி அவர் சொன்னது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் 281 சீட்கள் கைப்பற்றி ஆட்சி அமைத்த ஒரு கட்சியின் தலைவரைப் பற்றி ஒரே ஒரு சீட் வெல்ல முடிந்த ஒரு கட்சியின் ஆதரவாளர் பேசுகிற பேச்சு இது! அவர் ஜே..என்.யூ-வில் பயிலும் ஒரு ஆராய்ச்சி மாணவரும் கூட! பிரதமரை எதிர்க்கும் டெல்லி முதல் மந்திரிக்கும் அந்தப் பேச்சு அல்வாவாக இனித்திருக்கும். ஆனந்தப்பட்ட கேஜ்ரிவால் “என்ன பிரமாதமான பேச்சு!” என்று ட்வீட் செய்கிறார். ஜே.என்.யு மாணவர்கள் படிப்பிலிருந்து எவ்வளவு விலகி வந்திருக்கிறார்கள், அரசியல் ஆதாயத்துக்காக சில தலைவர்கள் அந்த இளைஞர்களை எப்படிப் பகடையாக உருட்டிப் பார்க்கிறார்கள் என்பதுதான் இதில் தூக்கி நிற்கும் மிக வருத்தமான விஷயம். 

கன்னையா குமார் மற்றும் சில மாணவர்கள் மீதான தேச விரோத வழக்கை கோர்ட் எப்படிப் பார்த்து முடிவு செய்யப் போகிறது என்பது இப்போது முக்கியமான விஷயமல்ல.  கோர்ட்டின் முடிவு எப்படி இருந்தாலும் இது விஷயமாக சட்டத்தில் இன்னும் தெளிவு ஏற்பட வகை உண்டு.  மத்திய அரசை எதிர்க்கும் ஒரு மாணவர் தலைவர் மீது வேறு எதேனும் அரசியல் சார்ந்த கிரிமினல் வழக்கு எற்பட்டு அவர் பெயிலில் வந்து இருந்தால் – அதுவும் ஜே.என்.யு-வை சேர்ந்தவரானால் – அப்போதும் எதிர்க் கட்சிகள் இதே ஆர்வத்தையும் பாசத்தையும் அந்த மாணவர் தலைவர் பால் காண்பிக்கும்.  அந்த பல்கலைக் கழகத்தில் படிப்பின் முக்கியத்துவம் கண்டிப்பாக பாழ்படும்.

எதோ “சுதந்திரம் சுதந்திரம்” என்று கேட்டு விட்டு இப்போது ”இந்தியாவிலிருந்து அல்ல, இந்தியாவிற்குள் சுதந்திரம் என்றுதான் கேட்டோம்” என்கிறார்கள்.  இது கேசுக்கு உதவுமோ என்னவோ, போகட்டும்.  நல்ல வேளை! “புதிதாக 251 ரூபாய்க்கு வந்திருக்கும் ஃப்ரீடம்-251 எனப்படும் செல்போன்தான் நாங்கள் கேட்ட ஃப்ரீடம்!’ என்று விளக்காமல் விட்டார்களே!

இந்தியாவின் அளவிற்கு சுதந்திரம் கொண்டாடும் அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ கன்னையா குமார் மாதிரி ஒரு மாணவர் தலைவர் “தேவை நாட்டுக்குள் சுதந்திரம்!” என்று கோஷம் எழுப்பினால் மக்கள் சிரிப்பார்கள்.  அதே கோஷத்தை சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒருவர் வெளிச் சொன்னால் பின்னர் அவர் அழுவார் – அவர் இருக்கும் வரை.  இந்தியாவில் ஒருவர் அப்படி கோஷம் போட்டால் – அதுவும் ஜெ.என்.யு-வில் போட்டால் – அவர் சிரித்துக் கொண்டு அரசாங்கத்தை அழ வைக்கலாம்; இந்திய பொது மக்கள் சிரித்துக்கொண்டே அழவேண்டும்.
* * * * *

Copyright © R. Veera Raghavan 2016